செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருநீலம் பிராதான சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது டிராக்டரின் பின்னால் இரு சக்கர வாகனத்தில் தேன்மொழி மற்றும் அவரது குழந்தைகளான சித்தார்த் வயது (4), லோகேஷ்(3) ஆகிய மூவரும் சிங்கபெருமாள் கோயில் பகுதியில் இருந்து கருநீலத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது முன்னாள் சென்று கொண்டிருந்த டிராக்டரை முந்திச் செல்வதற்காக தேன்மொழி டிராக்டரின் வலது பக்கமாக தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்போது எதிர் திசையில் வந்த ஸ்கூட்டரை ஓட்டி வந்த லலிதா என்பவரின் வாகனத்தின் மீது தேன்மொழி வாகனம் நேருக்கு நேர் மோதியதில் தேன்மொழி அவரது இரண்டு குழந்தைகளுடன் ட்ராக்டருக்கு பின்னால் இனைத்திருந்த ட்ரெய்லரின் சக்கரத்தின் அருகே விழுந்ததில் குழந்தை சித்தார்த்தின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சித்தார்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததார்.


மேலும் படிக்க | வாழ்ந்தா இப்படி வாழணும் - பட்டதாரி இளைஞரின் கொடைக்கானல் குடில்


காயம்பட்ட லோகேஷ் மற்றும் தேன்மொழியையும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். லோகேஷ் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால் செங்கல்பட்டு மருத்துவமனையில் இருந்து சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனர், அத்துடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்று கொண்டிருக்கும் போது போகும் வழியிலேயே லோகேஷ்குமாருக்கு மூச்சு திணறல் ஏற்ப்பட்து. இதனால் சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தனர். இதன் போது லோகேஷ் குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.


இரண்டு குழந்தைகளும் இறந்த சூழ்நிலையில் தற்போது தேன்மொழி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சுயநினைவிழந்து ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். ஒரே நேரத்தில் இரண்டு குழந்தைகள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க | ரோட்டோர வைத்தியரிடம் வைத்தியம் பார்த்து வரும் தோனி! வைரலாகும் புகைப்படம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ