சென்னை விமான நிலையத்தில் 2 பேரிடம் இருந்தும் ரூ.28 லட்சம் மதிப்புள்ள 663 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக அண்மையில் செய்திகள் வெளியாகி வருகிறது. அந்தவரிசையில் தற்போது சார்ஜாவில் இருந்து திருவனந்தபுரம் வழியாக சென்னைக்கு வந்த விமானத்தில் கேரள மாநிலம் கோழிக்கோட்டைச்சேர்ந்த ஸ்ரீஜீத்(வயது 23), அகமது சலீக்(27) ஆகியோரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்தனர்.


அதிகாரிகளிடம் இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவர்களின் உடைமைகளை சோதனை செய்தனர். ஆனால் 2 பேரும் காலில் அணிந்து இருந்த ‘ஷூ’சற்று வித்தியாசமாக இருந்தது. இதனால் அவர்களிடம் இருந்து ‘ஷூவை’ கழற்றி சோதனை செய்தனர். அதில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். 2 பேரிடம் இருந்தும் ரூ.28 லட்சம் மதிப்புள்ள 663 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.