அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் மறைந்த மூக்கையாத் தேவர் நூற்றாண்டு விழா கடைபிடிக்கப்படுகிறது. அவர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் இருந்து தொடர்ச்சியாக 5 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு ஒருமுறை வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார். அவரது தொடர் முயற்சியால் உசிலம்பட்டி, மேலநீதி நல்லூர், கமுதி ஆகிய மூன்று இடங்களில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரில் கலைக்கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | கொரோனா பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்றாலும் அலட்சியம் வேண்டாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்


இந்நிலையில், அவரது நூற்றாண்டு விழாவையொட்டி மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இருக்கும் அவரது சமாதியில் பல்வேறு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். மாலையில் அவரது புகழை நினைவு கூறும் வகையில் ஒன்று விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மூக்கையாத் தேவரின் சொந்த ஊரான பாப்பாப்பட்டி கிராமத்தில் மூக்கையாத்தேவரின் அறக்கட்டளை இந்த பொதுக்கூட்டத்தை நடத்தியது.  இதில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயக்குமார் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், மூக்கையாத் தேவருக்கு உசிலம்பட்டியில் அதிமுக ஆட்சி காலத்தில் தான் சிலை நிறுவப்பட்டதாக பேசினார்.


அவரின் இந்தப் பேச்சுக்கு கூட்டத்தினர் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக அமமுகவினர் ஆக்ரோஷமாக தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர். அமமுக நிர்வாகி பாப்பாப்பட்டி முருகன் என்பவர், உசிலம்பட்டியில் இருக்கும் மூக்கையாத்தேவரின் சிலையை ஓபிஎஸ் தன்னுடைய சொந்த செலவில் நிறுவியதாகவும், அதற்கு எப்படி அதிமுக உரிமை கொண்டாட முடியும்? என கேள்வி எழுப்பினார். அத்துடன் உதயக்குமார் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டார். அப்போது அதிமுகவினர் முருகேசன் என்பவரை அப்புறப்படுத்தினர். உடனடியாக அமமுகவினர் குவியத் தொடங்கியதால் அந்தப் பகுதியில் மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. இதனை பார்த்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயக்குமார் கூட்டத்தில் இருந்து முன்கூட்டியே அவசர அவசரமாக கிளம்பிச் சென்றார். 


மேலும் படிக்க | கொரோனா கட்டுப்பாடு: முகக்கவசம் அணிய தமிழக மக்களுக்கு அறிவுறுத்தல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ