உதயநிதி ஸ்டாலின் நிச்சயம் அமைச்சர் ஆவார் - சீமான்
திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நிச்சயம் அமைச்சர் ஆவார் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
புதிய கல்வி கொள்கைக்கு எதிராக நாம் தமிழர் கட்சி சார்பில் கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களின் வீடுகளின் முன்பாக பதாகைகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். ஆனால், ஊரடங்கு காலத்தில் அரசு உத்தரவை மீறி ஆட்களை கூட்டி போராட்டத்தில் ஈடுபட்டதாக சீமான் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.
இதனிடையே இந்த வழக்கு தொடர்பாக பூந்தமல்லியில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சீமான் இன்று ஆஜரானார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ''திமுக அரசு புதிய கல்வி கொள்கையை ஏற்கிறதா? எதிர்க்கிறதா? என்பதை முதலில் தெளிவுபடுத்த வேண்டும். புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து போராடியதற்காக அதிமுக ஆட்சியில் என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
திமுக ஆட்சி அமைந்த பிறகு கொரோனா காலகட்டத்தில் போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என டி.ஜி.பி சைலேந்திரபாபு தெரிவித்தார். ஆனால், எங்களை மட்டும் இந்த வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தில் நேரில் வரவேண்டும் என அறிவித்திருப்பது எந்த விதத்தில் நியாயம்.
மேலும் படிக்க | தலைமைக்கு தர்மசங்கடத்தை உருவாக்கிட வேண்டாம்; உதயநிதி வேண்டுகோள்
உதயநிதி ஸ்டாலின் மீதும் கொரோனா காலத்தில் அதிக வழக்குகள் போடப்பட்டன. அவர் மீது போடப்பட்ட வழக்குகளை
தள்ளுபடி செய்வதற்காக இந்த திட்டத்தை கொண்டு வந்தார்களா என்று தெரியவில்லை.
உதயநிதி ஸ்டாலின் நிச்சயமாக அமைச்சராக ஆவார். ஐந்தாண்டுகள் அமைச்சராக மாட்டேன் என முடிந்தால் அவரை எழுதிக் கொடுக்கச் சொல்லுங்கள். அதன் பிறகு நான் பேசுகிறேன். புதிய கல்விக் கொள்கை இந்தி, சமஸ்கிருதத்தை தான் ஊக்குவிக்கிறது.
வட இந்தியர்கள் தமிழகத்திற்குள் நுழைவதால் முதலில் தமிழர்களை உழைப்பில் இருந்து வெளியேற்றுவார்கள் பின்னர் மண்ணில் இருந்து வெளியேற்றுவார்கள் இது நடக்கும்'' என சீமான்
தெரிவித்தார்.
மேலும் படிக்க | UPSC Topper: கோவை பெண் தமிழகத்தில் முதலிடம், ஏஐஆர் 42 பெற்று சாதனை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR