Udhayanidhi Stalin: திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள ஜோசப் கல்லூரி மைதானத்தில் 'எங்கள் முதல்வர், எங்கள் பெருமை' என்கிற தலைப்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சி நடைபெற்று வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதில், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று கலந்துகொண்டு  பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என் நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் பல சட்டப்பேரவை உறுப்பினர்கள் உடன் இருந்தனர். 


9 லட்சம் பேர் பார்வையிட்டனர்


இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,"திமுக தலைவரின் வரலாற்றை சொல்லக்கூடிய இந்த கண்காட்சி சென்னை, மதுரை, கோவையை தாண்டி தற்போது திருச்சியில் நடைபெற்று வருகிறது.


50 வருட உழைப்பை இந்த கண்காட்சியில் நீங்கள் பார்க்கலாம். ஒவ்வொரு முறையும் வெவ்வேறு இடங்களில் இந்த கண்காட்சியை பார்க்கும்போது வெவ்வேறு அனுபவங்கள் எனக்கு கிடைக்கிறது. 9 லட்சம் மக்கள் இந்த கண்காட்சியை பார்த்துள்ளனர்" என தெரிவித்தார். 


மேலும் படிக்க | தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதற்கு தஞ்சையில் நூதன முறையில் எதிர்ப்பு!


எந்த சவாலையும் எதிர்கொள்வோம்


தொடர்ந்து, காங்கிரஸ் கொண்டு வந்த மீசா சட்டத்திற்கும், மத்திய பாஜக அரசு தற்போது நடத்தும் வருமான வரித்துறை சோதனைக்கும் ஏதேனும் வேறுபாடு உண்டா என்கிற செய்தியாளரின் கேள்விக்கு,"வேறுபாடுகள் ஏதும் இல்லை. வருமானவரித்துறை சோதனை போன்ற எந்த சவாலாக இருந்தாலும் நாங்கள் அதனை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.


விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பாக 31 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளோம். விரைவில் அதற்கான பணிகள் துவங்கும். சேலத்தில் ஒரு கிராமத்தில், சிறப்பாக  விளையாட்டு அரங்கம் செயல்படுத்தி உள்ளனர். இதை மாதிரியாக வைத்து எல்லா ஊராட்சிகளிலும் அதுபோன்ற விளையாட்டு அரங்கம் கொண்டுவரும் திட்டம் உள்ளது. சட்டப்பேரவை முடிந்து ஏறத்தாழ ஒரு வாரம் மட்டுமே ஆகிறது. படிப்படியாக எனது மற்ற பணிகளை தொடங்க உள்ளேன்" என்றார். 


மேலும், தமிழ்நாடு அமைச்சரவை இலாகாக்கள் மாற்றப்படுவதாக தகவல் வருகிறது என்றும் குறிப்பாக நீங்கள் துணை முதல்வராக பதவி ஏற்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது என்றும் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு அவர்,"யார் கூறினார்கள்... எங்கிருந்து தகவல்கள் வந்தது" என கேள்வியுடன் சென்றார்.


அமைச்சரவை மாற்றமா?


அதாவது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளது. இதையொட்டி, தமிழ்நாடு அமைச்சரவையில் மிகப்பெரிய மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகின. 


இந்த மாற்றங்களில், நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், பால்வளத்துறை ஆவடி நாசர், சிறுபான்மை துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் பெயர் அடிப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.     


மேலும் படிக்க | கூட்டணியில் சரிபாதி சீட் வேண்டும் - அண்ணாமலை போடும் கணக்குக்கு அதிமுக செவி சாய்க்குமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ