தூத்துக்குடி வரும் நிர்மலா சீதாராமன்..! பின்னணி இதுதான்..!
Nirmala Sitharaman to visit Tuticorin: கனமழையால் பாதிக்கப்பட்டிருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தை பார்வையிட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் டிசம்பர் 26 ஆம் தேதி வருகிறார். அவர் தமிழ்நாடு வருவதற்கான பின்னணி இதுதான்.
கனமழை மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தை பார்வையிட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டிசம்பர் 26 ஆம் தேதி வருகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்க கடலில் ஏற்பட்ட வழிமண்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரியில் வரலாறு காணாத மழை பெய்தது. குறிப்பாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மழை வெள்ளத்தால் பல கிராமங்கள் தனித்தீவுகளாக மாறிப்போயின.
இந்த பாதிப்பில் இருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மக்கள் இன்னும் மீளவில்லை. இன்னும் சில கிராமங்களில் தண்ணீர் தேங்கியிருப்பதுடன், ஏராளமானோர் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து பரிதவித்து வருகின்றனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை உதவிகளை அப்பகுதிகளைச் சேர்ந்த அரசியல் கட்சியினரும், தமிழ்நாடு அரசும் செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறது. திமுக மகளிரணி தலைவரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, தூத்துக்குடி மாவட்டத்திலேயே முகாமிட்டு பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் நேரடியாக சென்று மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகிறார். அத்துடன் அவர்களுக்கு தேவையான உதவிகளையும் ஏற்பாடு செய்து கொடுகிறார்.
மேலும் படிக்க | தமிழகத்தை பொறுத்தவரை பிரதமர் பாராமுகமாகவே இருக்கிறார்-வைகோ
இது ஒருபுறம் இருக்க தமிழ்நாடு அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணத்தை அறிவித்துள்ளது. அத்துடன் மத்திய அரசிடமும் வெள்ள நிவாரணம் கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்திருக்கிறார். ஆனால், மத்திய அரசிடம் இருந்து தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களுக்கு பிரத்யேகமாக எந்தவொரு நிவாரணமும் அறிவிக்கவில்லை. மத்திய அமைச்சர்களும் யாரும் நேரில் வந்து பார்க்கவில்லை. இது குறித்து திமுக அமைச்சர்கள் மற்றும் கட்சியினர் பாஜகவினரையும், மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
குஜராத் மாநிலத்தில் வெள்ளம் ஏற்பட்டபோது நேரடியாக அம்மாநிலத்துக்கு சென்று பார்வையிட்ட பிரதமர் மோடி அடுத்த சில நாட்களில் ஆயிரம் கோடி ரூபாய் வெள்ள நிவாரண தொகையை விடுவித்தார். ஆனால் தமிழ்நாட்டில் வெள்ளம் ஏற்படும்போதெல்லாம் மத்திய அரசு போதுமான நிதியை ஒதுக்கவில்லை என திமுக கடுமையாக குற்றம்சாட்டி வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் கும்பமேளாவுக்காக நிதி ஒதுக்கும் மத்திய அரசு, தமிழ்நாட்டில் புயல் வெள்ளம் பாதிப்புகள் வந்தால்கூட நிதி ஒதுக்குவதில்லை என்று திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் விமர்சித்துள்ளது.
இந்த சூழலில் தான் மழைவெள்ளம் ஏற்பட்டு ஒருவாரத்துக்குப் பிறகு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தூத்துக்குடிக்குவர இருகிகறார். அங்கு வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிடும் அவர், இது குறித்து விரிவான அறிக்கை ஒன்றையும் பெற இருக்கிறார். அதன்பிறகு மத்திய அரசு சார்பில் மழை வெள்ள நிவாரணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | தென் மாவட்டத்தில் அரசு என்ன செய்கிறது...? முதல்வர் ஸ்டாலின் முழு விளக்கம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ