பட்ஜட்டில் நிதி ஒதுக்கீடு தொடர்பான சர்ச்சை! விளக்கமளிக்கும் மத்திய அமைச்சர்
Budget Allocation Explanation: தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு மட்டும் பட்ஜட்டில் அதிகநிதி ஒதுக்கப்படவில்லை என்றும், சுற்றுலா திட்டத்திற்காக அனைத்து மாநிலங்களுக்கும் நிதி பகிர்ந்து அளிக்கபட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்ரீபத்யசோநாயக் தெரிவித்தார்
கன்னியாகுமரி: தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு மட்டும் பட்ஜட்டில் அதிகநிதி ஒதுக்கப்படவில்லை என்றும், சுற்றுலா திட்டத்திற்காக அனைத்து மாநிலங்களுக்கும் நிதி பகிர்ந்து அளிக்கபட்டுள்ளது என்றும் மத்திய சுற்றுலா மற்றும் துறைமுகத்துறை அமைச்சர் ஸ்ரீபத்யசோநாயக் தெரிவித்தார். கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரில் ஆஞ்சனேயர் திருக்கோவில் அடிகல்நாட்டு விழாவில் மத்திய சுற்றுலா மற்றும் துறைமுகத்துறை அமைச்சர் ஸ்ரீபத்யசோநாயக் கலந்து கொண்டார்.
கோவில் அடிக்கல்நாட்டு விழாவில் கலந்துக் கொண்ட அமைச்சர், அதன் பிறகுக் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கன்னியாகுமரியில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் குமரி சுற்றுலா திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கபடும் என பிரதமர்மோடி தெரிவித்ததையும், அதனைத் தொடர்ந்து மத்திய சுற்றுலாதுறை அமைச்சராக இருந்த சுபாத்கான்சகாய், மாவட்டத்தில் சுற்றுபயணம் மேற்கொண்டு பல்வேறு சுற்றுலா சுற்றுலா வளர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டதைப் பற்றியும் குக்றிப்பிட்டுப் பேசினார்.
தேர்தல் பிரச்சாரத்தில் சொன்னதற்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கபடவில்லை என்றும், முன்னாள் மத்திய சுற்றுலாதுறை அமைச்சர் அறிவித்த திட்டங்கள் குறித்து தமக்கு தெரியாது எனவும், அது குறித்து மாநில அரசு உரிய தகவலளித்தால் நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்கு மட்டும் தற்போதைய பட்ஜட்டில் மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கவில்லை என்று தெரிவித்த மத்திய சுற்றுலா மற்றும் துறைமுகத்துறை அமைச்சர் ஸ்ரீபத்யசோநாயக், அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவாகவே நிதி ஒதுக்கபட்டுள்ளது என்று குறிப்பிட்டார். அதிலும் குறிப்பாக சுற்றுலாதுறைக்கும் அனைத்து மாநிலங்களுக்கும் நிதி பகிர்ந்தே ஒதுக்கபட்டுள்ளது என்று சுட்டிக்காட்டினார்.
மேலும் படிக்க | Video: இந்திய வீரர் அடித்த ஒரே அறை... அதிர்ந்த தினேஷ் கார்த்திக்
தமிழகத்தில் புதிய துறைமுக திட்டங்கள்
தமிழகத்தில் ஒன்றிரண்டு புதிய துறைமுக திட்டங்களை நடைமுறைபடுத்த சாத்தியம் உள்ளதாக தெரிவித்த அவர், தமிழகத்தில் சுற்றுலா திட்டங்களை பொறுத்தவரையில் மாநில அரசு எந்த திட்டங்களையும் மத்திய அரசிடம் கேட்கவில்லை என்று கூறினார்.
மாநில அரசு சுற்றுலா மேம்பாடு திட்டங்கள் குறித்து கோரிக்கை வைத்தால், அதை ஆய்வு செய்து நிதி ஒதுக்க நடவடிக்கை மேற்கொள்ளபடும் என்று தெரிவித்தார். ஏற்கனவே தமிழகத்தில் 76 திட்டங்களில் 50 திட்டங்களை நடைமுறைபடுத்தபட்டுவருகிறது என்று கூறிய மத்திய சுற்றுலா மற்றும் துறைமுகத்துறை அமைச்சர் ஸ்ரீபத்யசோநாயக், எங்களை பொறுத்தவரையில் மாநில அரசு சுற்றுலாதிட்டங்களை மத்திய அரசிடமிருந்து கேட்டுபெற முன்வரவேண்டும் என கூறினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ