கொரோனா வைரஸ் (Corona Virus) பரவலைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களும், தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் 100 விழுக்காடு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற இலக்குடன், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகிறது. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களில் நடமாடுவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | சுடுகாட்டை சூதாட்டக் களமாக மாறிய நபர்கள் கைது


இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அம்மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திரபானுரெட்டி, கிருஷ்ணகிரி (Krishnagiri) மாவட்டத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருப்பதாக கூறியுள்ளார். இரண்டாம் அலை தொடங்கியபோது, நாளொன்றுக்கு 800 பேர் வீதம் பாதிக்கப்பட்டதாகவும், அந்த எண்ணிக்கை படிப்படியாக குறைந்து நாளொன்றுக்கு 10 பேருக்கும் குறைவாக பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மாவட்டத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 15 லட்சத்து 2 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியானவர்கள் எனக் கூறியுள்ள ஜெயச்சந்திரபானு ரெட்டி, இதுவரை 10 லட்சத்து 86 ஆயிரத்து 500 பேர் தடுப்பூசி போட்டிருப்பதாக கூறியுள்ளார். 4 லட்சத்து 20 ஆயிரம் பேர் இன்னும் தடுப்பூசி போட வேண்டியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.


ALSO READ | தமிழகத்தில் OLA அமைக்கும் உலகின் மிகப்பெரும் மின்சார வாகன உற்பத்தி மையம்


ஓமைக்ரான் வைரஸ் இப்போது பரவி வரும் சூழலில், மாவட்டத்தில் இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் முகாம்களில் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், தடுப்பூசி செலுத்தி கொள்ளாத நபர்கள் மாவட்டத்தில் உள்ள பொது இடங்களான நியாய விலை கடை, வியாபார நிறுவனங்கள், சூப்பர் மார்க்கெட், திரையரங்கம், திருமண மண்டபம், கடைவீதிகள், துணிக்கடைகள், வங்கிகள் உள்ளிட்ட 18 இடங்களில் செல்ல தடை விதிக்கப்படுவதாக கூறியுள்ளார்.  இந்த விதிமுறைகளை பின்பற்றாத பொதுமக்கள் மற்றும் நிறுவன உரிமையாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜெயச்சந்திரபானுரெட்டி கூறியுள்ளார்.


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR