கந்துவட்டி கொடுமையால் விவசாயி தற்கொலை!!
கந்துவட்டி கொடுமையால் அரியலூரை சேர்ந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து இருக்கிறார்.
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள பெரியமறை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மாணிக்கம். அதே கிராமத்தில் உள்ள அவரது நிலத்தின் பேரில் ஏலாகக்குறிச்சியைச் சேர்ந்த நாச்சிமுத்து என்பவரிடம் 2005ஆம் ஆண்டில் ரூ.1.75 லட்சம் கடன் பெற்றதாகத் தெரிகிறது.
கடந்த 2012ம் ஆண்டு திருப்பிக்கொடுக்கச்சென்ற மாணிக்கத்திடம் வட்டியுடன் சேர்த்து 10 லட்சம் தரவேண்டும் என நாச்சிமுத்து கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த மாணிக்கம், ரூ.1.75 லட்சத்திற்கு மாதம் 2 ரூபாய் வட்டி கணக்கிட்டாலும் 4 லட்ச ரூபாய் வரைதானே செலுத்த நேரிடும் என்று கேட்டுள்ளார்.
வறுமையால் குழந்தையை விற்ற தாய்!!
பின்னர் தன்னிடம் இருந்த ரூ.1.75 லட்சத்தை நாச்சிமுத்துவிடம் அளித்ததாகவும் தெரிகிறது. ஆனால், கடனுக்கு ஈடாக மாணிக்கத்தின் நிலத்தை வேறு ஒருவருக்கு 10 லட்ச ரூபாய்க்கு நாச்சிமுத்து விற்றதாகத் தெரிந்ததும், மாணிக்கம் மற்றும் அவரது மகன் ஜெகந்நாதன் இருவரும் கந்து வட்டி கொடுமை குறித்து திருமானூர் காவல் நிலையத்தில் சில மாதங்களுக்குமுன் புகார் அளித்தனர்.
2017-ம் ஆண்டில் தமிழகத்தை அதிர வைத்த சம்பவங்கள்!!
ஆனால் போலீஸ் இதில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மனமுடைந்த மாணிக்கம் தனது வயலில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
அரியலூரில் கடந்த ஆண்டில் மட்டும் 54 கந்துவட்டி வழக்குகளும் பதிவாகி உள்ளன என்று ஓராண்டின் புள்ளிவிவரம் வெளியாகி இருக்கிறது.
மேலும், கர்நாடகாவில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் கடன் தொல்லையால் 3,515 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அம்மாநில வேளாண் துறை தெரிவித்துள்ளது.