ரூ.10.10 கோடி அபராதம் செலுத்தினார் சசிகலா...விரைவில் விடுதலையா?
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா ரூ.10.10 கோடி அபராதத் தொகையை சிறப்பு நீதிமன்றத்தில் செலுத்தினார்.
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ம் தேதியில் இருந்து அவர், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வருகிறார். அந்தவகையில் அவரது தண்டனை காலம் இன்னும் ஒரு சில மாதங்களில் முடிவடைய உள்ளது. இதற்கிடையில் சசிகலா விடுதலை குறித்து செய்திகள் வெளியாகி வந்தன.
அந்தவகையில் சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா தற்போது அவரின் தண்டனை காலத்தை விரைவில் நிறைவு செய்ய உள்ளார். மேலும் ஜனவரி மாதம் அவர் விடுதலை ஆவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியது.
ALSO READ | சசிகலா சிறையில் இருந்து விடுவிக்கப்படலாம்: ராஜா செந்தூர் பாண்டியன்
வழக்கமான நடைமுறைகளின்படி, அபராதத் தொகையை செலுத்த அனுமதிக்க கோரி பெங்களூரு நகர சிவில் நீதிமன்றத்தில் சசிகலா (VK Sasikala) மனுத்தாக்கல் செய்து இருந்தார். ஏற்கனவே, தனது அபராதத் தொகை ரூ.10 கோடியை நீதிமன்றத்தில் சுதாகரன் செலுத்தி உள்ளார்.
இந்நிலையில் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த ரூ.10.10 கோடி அபராதத் தொகையை நேற்று சசிகலா வழக்கறிஞர் முத்துகுமார் நீதிமன்றத்தில் காசோலை வாயிலாக வழங்கினார். இதனையடுத்து அவர் விரைவில் விடுதலை ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ALSO READ | சசிகலா மற்றும் அவரது உறவினருக்கு சொந்தமான 2 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR