சசிகலா மற்றும் அவரது உறவினருக்கு சொந்தமான 2 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம்

முன்னால் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான 2,000 கோடி ரூபாய் அளவிலான சொத்துக்களை பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை முடக்கியுள்ளது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 7, 2020, 04:39 PM IST
  • சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான ரூ. 2000 கோடி அளவிலான சொத்துக்கள் பினாமி சட்டத்தின் கீழ் முடக்கம்.
  • இன்று எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது.
  • மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.
  • 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சொத்து குவிப்பு வழக்கில், சசிகலா குற்றவாளி என பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உறுதி செய்தது.
சசிகலா மற்றும் அவரது உறவினருக்கு சொந்தமான 2 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம்

CHENNAI: முன்னால் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான 2,000 கோடி ரூபாய் அளவிலான சொத்துக்களை பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை முடக்கியுள்ளது. அதில் சிறுதாவூர் பங்களா, கொடநாடு எஸ்டேட் உட்பட சொத்துக்கள் முடக்கப்பட்டு உள்ளது.

இன்று எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ள நிலையில், சசிகலா (Sasikala), இளவரசி மற்றும் சுதாகரனுக்கு  சொந்தமான சொத்துக்கள் முடக்கப்பட்டு இருப்பது அரசியல் வட்டாரத்தில் விவாதத்துக்கு உள்ளாகி உள்ளது. 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் (Jayalalitha) தோழியான சசிகலா, சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நிலையில், அவர் விடுதலையாகும் நாளை எண்ணிக் கொண்டிருக்கிறார். தேர்தலுக்குமுன் அவர் நிச்சயம் விடுதலையாகி வடுவார் என்ற நிலையில், அவரது விடுதலை மூலம் தமிழக அரசியல் களத்தில் என்ன விதமான மாற்றங்கள் இருக்கும் என்பது தொடர்பான பல ஊகங்கள் கிளம்பியுள்ளன. 

ALSO READ | ஜெயலலிதாவின் அனைத்து சொத்துக்களுக்கும் நானே உரிமையாளர் -சசிகலா

இதனையடுத்து அவர் தமிழகத்தில் அரசியல் சக்தியாக மாறாமல் இருக்க தேர்தல் வரை அவர் விடுதலையை தள்ளிப் போட சில காய்நகர்த்தல்கள் செய்யப்படுகிறது என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். 

முன்னதாக வருமான வரி துறை, பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உயிர்தோழியான சசிகலாவின் சுமார் 300 கோடி மதிப்பிலான 65 சொத்துக்களை முடக்கியது. அது தாம்பரம், ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடத்தில் உள்ள சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன.

ALSO READ | சசிகலாவின் சொத்துக்களை முடக்கிய வருமான வரித்துறை.. விடுதலை தள்ளிப்போகுமா..!!

2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சொத்து குவிப்பு வழக்கில், சசிகலாவிற்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையை, சுப்ரீம் கோர்ட் உறுதி செய்ததை அடுத்து, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News