உதகை : " கால்நடைகளுக்கு கோமாரி நோய்க்கான தடுப்பூசி போடும் பணி நாளை (புதன்) உதகையில் (Udhagai) தொடங்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"இது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா (Innocent dhivya) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 


அதில் அவர் "கால்நடை வளர்ப்பின் மூலம் கால்நடைகளிலிருந்து கிடைக்கும் பால் மனிதர்களின் உணவில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. கால்நடைகளிலிருந்து பெறப்படும் பால் , மாமிசம், தோல் , உரோமம் மற்றும் பிற உப பொருட்களின் மூலம் நாட்டிற்கு பெரும் பொருளாதாரத்தை ஈட்டி கொடுப்பதால் நாட்டின் பொருளாதாரத்தில் கால்நடை வளர்ப்பு பெரும் பங்கு வகிக்கிறது. எனவே கால்நடைகளை நோயின்றி பேணிக்காப்பது கால்நடை வளர்ப்போரின் முக்கிய கடமையாக உள்ளது.


Also Read | இது நாக்கு ஜோசியம் அல்ல! உடல் ஆரோக்கியத்தின் அறிகுறி


இந்நிலையில் மாடுகளில் ஏற்படும் வியாதிகளில் கோமாரி நோய் பெருமளவில் கால்நடைகளை தாக்கும் நோய் என்பது குறிப்பிடத்தக்கது. நீலகிரி மாவட்டத்தில் சுமார் 28 எட்டாயிரத்து 500 பசு மற்றும் எருமையினங்களை கோமாரி நோயிலிருந்து காக்கும் வண்ணம் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் என்.ஏடி.சிபி இரண்டாம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசி கால்நடைகளுக்கு மாட்டினம் ,எருமையினம் போடும் பணி செப்டம்பர் 1ஆம் தேதி (September 1) நாளை முதல் நடைபெறுகிறது.


விவசாயிகளுக்கு தங்களது கிராமத்தில் எந்த நாளில் தடுப்பூசி பணி நடைபெறும் என்ற விவரத்தினை முன்கூட்டியே சம்பந்தப்பட்ட கால்நடை மருந்தகத்தால்
 அக்கிராமத்திற்கு (Village) தெரிவிக்கப்படும் அல்லது பொதுமக்கள் தங்கள் பகுதி கால்நடை மருத்துவமனை , கால்நடை மருந்தகம் , அல்லது கால்நடை கிளை நிலையங்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.!


Also Read | Corona Vaccine: கொரோனா தடுப்பூசி வீணாவதை தடுக்க ரோபோட்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR