3 மாவட்டங்களில் ஒருபோக பாசனத்திற்காக வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது

அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மூலம் திண்டுக்கல் மாவட்ட பகுதிகளில் உள்ள நிலக்கோட்டை மற்றும் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி , மேலூர், மதுரை வடக்கு, திருமங்கலம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் இருக்கக்கூடிய சுமார் 1 இலட்சத்து 5 ஆயிரம் ஏக்கரில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
"வைகை அணையிலிருந்து மூன்று மாவட்டங்களுக்கு ஒரு போக சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தின் வைகை அணையிலிருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கு "ஒரு போக நெல் சாகுபடிக்காக வினாடிக்கு 1,130 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
வைகை அணையிலிந்து (Vaigai River) திறக்கப்பட்ட நீரானது திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களின் பாசனத்திற்காக கால்வாய் மூலம் திறக்கப்பட்டு வருகிறது.
"ஒரு போக நெல் சாகுபடிக்காக அணையிலிருந்து வினாடிக்கு 1.30 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இது மதுரை மற்றும் திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களுக்கு வருகின்றது.
ALSO READ: கொரோனா சிகிச்சை கட்டணம் மாற்றியமைப்பு: தமிழக அரசு
அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மூலம் திண்டுக்கல், மாவட்ட பகுதிகளில் உள்ள நிலக்கோட்டை மற்றும் மதுரை (Madurai) மாவட்டம் வாடிப்பட்டி , மேலூர், மதுரை வடக்கு, திருமங்கலம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் இருக்கக்கூடிய சுமார் 1 இலட்சத்து 5 ஆயிரம் ஏக்கரில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
அணையிலிருந்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் 45 நாட்களுக்கு தொடர்ச்சியாகவும் பின்னர் மீதமுள்ள நாட்கள் தண்ணீரின் இருப்பினை பொறுத்தும் திறக்கப்பட உள்ளது.
வைகை அணை திறப்பின் போது கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி , ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பணன், வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் அணையிலிருந்து தண்ணீரினை திறந்து விட்டனர். தேனி மாவட்ட ஆட்சியர் க.வீ முரளிதரன், மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஸ் சேகர் , திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் , சிவகங்கை ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி ஆகியோர் முன்னிலை முன்னிலை வகித்தனர்.
ALSO READ: District Wise Covid update ஆகஸ்ட் 11: இன்றைய கோவிட் பாதிப்பு மாவட்ட வாரியாக!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR