கொரோனா சிகிச்சை கட்டணம் மாற்றியமைப்பு: தமிழக அரசு

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை மாற்றியமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 12, 2021, 09:42 AM IST
கொரோனா சிகிச்சை கட்டணம் மாற்றியமைப்பு: தமிழக அரசு title=

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று சமீப நாட்களாக குறைந்து காணப்பட்டாலும் மூன்றாம் அலை வருவதற்குண்டான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளது. இதற்கிடையில் தமிழகத்தில் 1,964 பேருக்கு நேற்று ஒரேநாளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,81,094 ஆக அதிகரித்துள்ளது. 

அதேசமயம் சென்னையில் 243 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று (Coronavirus) ஏற்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரேநாளில் 28பேர் உயிரிழந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் (Corona Death) மொத்த எண்ணிக்கை 34ஆயிரத்து 395 ஆக அதிகரித்துள்ளது.

ALSO READ | District Wise Covid update ஆகஸ்ட் 11: இன்றைய கோவிட் பாதிப்பு மாவட்ட வாரியாக!

இந்நிலையில் குறைந்து வரும் கொரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அரசாணையை வெளியிட்டுள்ளது. அதில், தனியார் மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கான கொரோனா சிகிச்சை கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் அல்லாத படுக்கை வசதிக்கு ரூ.3,000 கட்டணமாக நிர்ணயிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதிக்கு ரூ.7,000 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் வென்டிலேட்டருடன் கூடிய தீவிர சிகிச்சைக்கு ரூ.15,000 கட்டணம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கடுமையான சுவாச செயலிழப்பு ஏற்பட்டோருக்கான வெண்டிலேட்டர் சிகிச்சைக்கு ரூ.56,200 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வெண்டிலேட்டர் அல்லாத தீவிர சிகிச்சைக்கு நாளொன்றுக்கு ரூ.27,100 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ALSO READ | IT Raid: பழிவாங்கும் நடவடிக்கையை திமுக நிறுத்த வேண்டும் - வானதி ஸ்ரீனிவாசன்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News