களிமேடு விபத்து எதிரொலி: களையிழந்த 200 ஆண்டுகால திருவிழா
கடந்த 27 ஆம் தேதி தஞ்சாவூர் அருகே களிமேடு தேர் விபத்தால் இந்த ஆண்டு திருவிழா களையிழந்தது.
தேவாரம் பாடிய நால்வர்களில் உருவான திருஞானசம்பந்தர் வைகாசி மாதம் மூல நட்சத்திரத்தில் முக்கி அடைந்ததாக கூறப்படுகிறது. சம்பந்தர் முக்தி அடைந்த அந்நாள் சம்பந்தர் குருபூஜை விழாவாக ஒவ்வொரு ஆண்டும் தஞ்சையில் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு ஞானசம்பந்தர் குருபூஜை விழாவை முன்னிட்டு தஞ்சை நகர பகுதிகளில் அமைந்துள்ள விநாயகர் மற்றும் முருகன் ஆலயங்களில் இருந்து, நள்ளிரவு சுவாமி புறப்பாடாகி மேலவீதி, தெற்கு வீதி உள்ளிட்ட ராஜ வீதிகளில் உலா வந்து, பக்தர்களுக்கு சுவாமி அருள்பாலித்தார்.
பின்னர் விடியற்காலை அந்த கோவில்களுக்கு பல்லக்குகள் சென்று அடையும். சுமார் 200 ஆண்டுகால இந்தத் திருவிழாவானது ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும்.
மேலும் படிக்க | களிமேடு தேர் விபத்து : அப்பர் சிலைக்கு சிறப்பு பூஜை.!
கடந்த 27 ஆம் தேதி தஞ்சாவூர் அருகே களிமேடு தேர் விபத்தால் இந்த ஆண்டு திருவிழா களையிழந்தது.
குறிப்பாக 18 ஆலயங்களில் இருந்து வரக்கூடிய பல்லக்குகள் பாதியாக குறைந்து வெறும் ஏழு ஆலயங்களில் மட்டுமே முத்துப் பல்லக்குகள் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் கடந்த 26ஆம் தேதி 94வது ஆண்டு அப்பர் தேர் திருவிழா நடைபெற்றது. அப்போது நடைபெற்ற வீதி உலாவின்போது, உயரழுத்த மின்கம்பியில் தேர் உரசியதால் மின்சாரம் பாய்ந்து 3 சிறுவர்கள் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 17 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் விபத்து நடைபெற்று 18 நாட்கள் முடிவடைந்தவுடன் சிறப்பு பூஜை வழிபாடுகள் செய்ய கோயில் நிர்வாகம் ஏற்கனவே திட்டமிட்டிருந்தது. முன்னதாக விபத்து ஏற்பட்டபோது தேரில் வைக்கப்பட்டிருந்த ஐம்பொன்னாலான அப்பர் சிலையும், 300 ஆண்டுகள் பழமையான ஓவியமும் மீட்கப்பட்ட நிலையில் பூஜை வழிபாடுகளுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் படிக்க | Thanjavur Temple Chariot: உயிரிழந்தவருக்கு பேரவையில் இரங்கல்; 2 நிமிட மௌன அஞ்சலி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR