திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் செயல்படும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்த நிலையில் நேற்றிரவு, டாக்டர் கலைஞர் அவர்களை வைகோ சந்தித்தார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது...


"சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.கழகத்தின் செயல் தலைவருமான தளபதி ஸ்டாலின் அவர்களை மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நேற்று இரவு 7 மணி அளவில் அவரது இல்லத்தில் சந்தித்தார். அவரோடு உரையாடிவிட்டு, அவரது காரிலேயே அவருடன் கோபாலபுரம் இல்லத்திற்குச் சென்றார். 


இரவு 8 மணி அளவில் டாக்டர் கலைஞர் அவர்களை வைகோ பார்த்தபோது, யார் என்று தெரிகிறதா? என்று தளபதி ஸ்டாலின் அவர்கள் கலைஞரிடம் கேட்டவுடன், புன்னகை பூத்தவாறு வைகோ என உணர்த்தினார்.


சந்தித்துவிட்டு வெளியே வந்தபின் நிருபர்களிடம், “அரசியலில் என்னை வளர்த்து ஆளாக்கிய, இமைப்பொழுதும் நெஞ்சில் நீங்காது என்னை இயக்கிய அண்ணன் டாக்டர் கலைஞர் அவர்களைப் பார்த்தேன். நலமாக இருக்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பக்கபலமாக, உறுதுணையாக செயல்படுவது என்று எங்கள் இயக்கம் ஒருமனதாக முடிவு செய்தது என்று நான் கூறினேன். அண்ணன் கலைஞர் அவர்கள் கரத்தைப் பற்றிக்கொண்டேன். மனதை நெகிழச் செய்கின்ற உணர்ச்சிமயமான சந்திப்பாக எனக்கு அமைந்தது” என வைகோ தெரிவத்தார்.