நுரையீரலில் நிறைகிறது மழை - காலை மழை குறித்து வைரமுத்து கவிதை
சென்னையில் இன்று காலை பெய்த மழை குறித்து வைரமுத்து எழுதிய கவிதை வைரலாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக வெயில் கடுமையாக இருந்தது. இதனால் மக்கள் பெரும் அவதியடைந்தனர்.
இந்தச் சூழலில் வங்கக் கடலில் உருவான அசானி என்ற புயலால் இன்று காலை சென்னையில் மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்மேகமூட்டத்துடன் காணப்படும். இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை விட்டு விட்டு பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று காலை பெய்த மழை குறித்து பாடலாசிரியர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், “சென்னை நனைகிறது
மேலும் படிக்க | விரைவில் முடிகிறது விடுதலை - உற்சாகத்தில் சூரி
மே மாதம்
பனிக்கட்டியாகிறது
ஆடையோடு
குளியல் கொள்ளும் தாவரங்கள்
மழை ஓசை
எல்லா சங்கீதங்களையும்
சாகடிக்கிறது
நுரையீரலில்
நிறைகிறது மழைவாசனை
நான்
என் தேநீருக்குள்
சுடவைத்துக் கொண்டிருக்கிறேன்
ஒரு பாடலை” என்று கவிதை எழுதியிருக்கிறார்.
அவரது இந்தக் கவிதையை படித்த ரசிகர்கள் அதனை பகிர்ந்துவருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR