திமுக அரசை கண்டித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வைத்திலிங்கம் பேசியதாவது, தி.மு.க., ஆட்சி சுயநலக்காரான எடப்பாடி பழனிசாமியால் தான் ஆட்சிக்கு வந்தது.  நாங்கள் சொல்லுவதை அவர் கேட்டு இருந்ததால், அ.தி.மு.க., தமிழகத்தை ஆண்டுக்கொண்டு இருக்கும். தி.மு.க., ஆட்சி எப்போது போகும் என மக்கள் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். 524 தேர்தல் அறிக்கை அறிவிப்புகளை வெளியிட்ட தி.மு.க., ஒரு அறிவிப்பையும் நிறைவேற்றவில்லை. தி.மு.க., ஆட்சியில், மின்சார வெட்டு, கள்ளச்சாரயம் இப்படி நாடு சீரழிந்துக்கொண்டு இருக்கிறது. விடியா அரசாக தி.மு.க.,அரசு செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. எங்களை எதிரிகள் நெஞ்சில் குத்தினால் தாங்கிக்கொள்ளலாம். ஆனால், துரோகிகள் அ.தி.மு.க., ஆட்சிக்கு வருவதை தடுத்து விட்டார்கள். அதை நிறைவேற்றதான் அ.தி.மு.க.,வும், அ.ம.மு.க.,வும் இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்படும். தமிழகத்தில் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதற்காக, ஓ.பி.எஸ்.,தினகரன் இருவரும் அடித்தளமிட்டுள்ளனர். நிச்சயம் 2024ல் அ.தி.முக., அ.ம.மு.க., நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றிப்பெறும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | இந்தி பேசாத ஊழியர்களை அவமதிப்பதா? நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் - முதலமைச்சர்


அ.தி.மு.க., ஒன்றாக இணையாக யார் தடையாக இருந்தாலும், அவர்கள் துாக்கி வீசப்படுவார்கள்.  தொண்டர்களால் அவமானப்படுத்தப்படுவார்கள். அதிகாரம், பணம் இருக்கிறது என நினைக்கிறார்கள். தொண்டர்கள் தான் தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என எம்.ஜி.ஆர்., கூறியுள்ளார். அதே தான் நாங்களும் போராடிக்கொண்டு இருக்கிறோம். எடப்பாடி பழனிசாமியிடம் இரட்டை இலை சின்னம் இல்லை என்றால், ஒரு தொகுதியில் கூட ஆயிரம் வாக்குகள் அவரால் வாங்க முடியாது. நாங்கள் கத்திரிக்கோல் சின்னத்தில் தேர்தலில் நிற்க தயார். எடப்பாடி பழனிசாமி பிளேடு சின்னத்தில் நிற்க தயாரா?, அப்படி நின்று எங்களை விட ஒரு வாக்கு அதிகமாக வாங்கி விட்டால், அ.தி.மு.க.,வை விட்டு விலகி விடுகிறோம். காலத்தில் சூழச்சியாலும், நயவஞ்சகத்தாலும் அதிகாரத்தோடு பேசிய எடப்பாடி பழனிசாமி வைத்திலிங்கம் ஒன்றும் செய்யவில்லை என கூறினாராம். நான் அ.தி.மு.க.,வில் ஒரு இடத்தை பிடிப்பதற்கு, காரணமாக இருந்த சசிகலா, தினகரன், திவகாரன் போன்றவர்கள் உதவிக்கரமாக இருந்தார்கள். காலத்தின் கட்டாயத்தால் அ.தி.மு.க., நிச்சயம் இணையும். 100 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும். 2026ல் அ.தி.மு.க., அ.ம.மு.க., இணைந்து செயல்பட்டு, அ.தி.மு.க., ஆட்சியை கொண்டு வரும் இவ்வாறு அவர் பேசினார்.


அ.ம.மு.க., பொதுச் செயலாளர் தினகரன் பேசியதாவது, ஆட்சி அதிகாரத்திற்காக அ.ம.மு.க., தொடங்கப்படவில்லை. ஜெயலலிதாவின் லட்சியங்கள், மக்கள் நலக்கொள்கையால் தமிழத்தில் நிலைநாட்டாவும், மக்களுக்கு தொடர்ந்து கிடைத்திடவும், உண்மையான ஆட்சி தான் ஒரே தீர்வு என்பதை உணர்த்துகின்ற, ஆறு ஆண்டுகள் என்னுடன் சோதனைகளையும், தேர்தல் தோல்விகளையும் தாண்டி இன்னும் ஜெயலலிதாவின் தொண்டர்கள் என்னுடன் உள்ளனர். தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் அமைப்பதற்கும், இன்றைக்கு ஒரு சில சுயநலவாதிகள் கையில் உள்ள ஜெயலலிதாவின் இயக்கத்தை மீட்டு எடுப்பதற்காக என்னுடன், ஓ.பி.எஸ். வைத்திலிங்கம் உள்ளிட்டோர் கைகோர்த்துள்ளனர். இது இயற்கையாக ஏற்பட்ட நிகழ்வு, தேவைக்காக ஏற்பட்ட நிகழ்வு அல்ல. காலத்தின் அருமை கருதி, நாம் பிரிந்து இருந்தால் தி.மு.க., என்னும் தீயசக்தியை வீழ்த்த முடியாது என்பதாலும், ஆட்சியில் இருந்துக்கொண்டு தமிழக மக்களை வாட்டி வதைப்பதை தட்டிக்கேட்பதற்கும், ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து, ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை தமிழகத்திற்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக இணைந்துள்ளோம்.


எங்களின் இணைப்பு தமிழகம் முழுவதும் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா அலங்காரத்தில் தலைவர் பதவியை, யாரோ ஒருவரால் களபேரம் செய்து விட்டார்கள்.  அவர்களிடம் இருந்து அதை மீட்டெடுக்க தான், நானும், ஓ.பி.எஸ்., இருவரும் இணைந்து இருக்கிறோம். ஜாதி,மதங்களுக்கும், பகுதிகளுக்கும் அப்பறபட்டு, தமிழக மக்கள் அனைவரும் இதை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டுள்ளனர். இதன் வெளிப்பாடு வரும் நாடாளுமன்ற தேர்தலில், தமிழக முழுவதும் எதிரொலிக்கும்.  தி.மு.க., தலைவர் ஸ்டாலின், தேர்தலுக்கு முன்பு எது எல்லாம் தமிழகத்திற்கு வேண்டாம் என்ற போராட்டம் நடத்தினரோ, எது எல்லாம் வேண்டும் என்று போராட்டம் நடத்தினரோ அதை எல்லாம் விட்டு விட்டு, கொடுங்கொல் ஆட்சியை செய்துக்கொண்டு இருக்கிறார் என்பது தான் உண்மை. பொதுக் கூட்டத்தின் முடிவில் டிடிவி தினகரனுக்கு போர்வாள் மற்றும் செங்கோல் வழங்கப்பட்டது.


மேலும் படிக்க | தமிழகம் முழுவதும் 1.1 கோடி மரங்களை நட காவேரி கூக்குரல் இயக்கம் இலக்கு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ