கோவை சித்தாபுதூர் பகுதியில் பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடியின் கோவை வருகை மக்களாலும், பாஜகவினராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது என்றார். மோடியின் ரோடு ஷோவினை பிரமாண்ட முறையில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. நாளை மாலை 5.30 மணிக்கு சாய்பாபா காலணி பகுதியில் துவங்கும் பேரணி, 3 கி.மீ. கடந்து ஆர்.எஸ்.புரம் பகுதியில் நிறைவடையும் என வானதி சீனிவாசன் கூறினார். பிரதமர் மோடிக்கு பாஜகவினரும், பொதுமக்களும் உற்சாகமாக வரவேற்பு தருவார்கள். இதில் கோவை மட்டுமின்றி அருகில் உள்ள சட்டமன்ற தொகுதியில் உள்ளவர்களும் கலந்து கொள்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம்: 21 தமிழக மீனவர்கள் கைது


தொடர்ந்து பேசிய வானதி சீனிவாசன், "மோடியின் வருகையின் போது பராம்பரிய பொருட்கள் கண்காட்சி அமைக்கப்படும். ஆங்காங்கே மேடை அமைத்து சமுதாய தலைவர்கள் மற்றும் பயனாளிகளை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு மக்கள் பங்களிப்பு உடன் இந்த நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடியை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு இருப்பதால், இந்நிகழ்ச்சியில் இருபுறமும் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம். யாருக்கும் எந்த கட்டுப்பாடும் கிடையாது. இதற்கென தனியாக பாஸ் கிடையாது. இந்நிகழ்ச்சிக்கு வரும் பொதுமக்கள் 2 மணிக்கு முன்பு வந்து சேர வேண்டும்" என தெரிவித்தார்.


"தேர்தல் தேதி அறிவிப்பில் கூட காங்கிரஸ், திமுக விமர்சனம் செய்கின்றனர் என கூறிய வானதி சீனிவாசன், பிரதமருக்கு தேர்தல் தேதி தெரிந்ததால் தான், தமிழகத்திற்கு வருவதாக சொல்கிறார்கள். தேர்தல் ஆணையத்தின் மீது அவர்கள் பழி போடுவது தேர்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொள்வதாக நாங்கள் பார்க்கிறோம். பிரதமர் மோடியை 28 பைசா என அழைக்க வேண்டுமென உதயநிதி சொல்லியுள்ளார். தமிழகத்திற்கு யுபிஏ அரசாங்கத்தில் கொடுத்ததை விட அதிகமாக கொடுத்தவர் மோடி. பாஜக ஆளும் மாநிலங்களை விட தமிழகத்திற்கு அதிகமான சிறப்பு திட்டங்களை பிரதமர் தந்துள்ளார். பிரதமர் மோடியை தரக்குறைவாக 28 பைசா என அழைப்போம் என்றால், ஜாபர் சாதிக் கூட தொடர்பில் இருந்த உதயநிதியை ட்ரக் உதயநிதி என அழைக்கலாமா? ஒருபோதும் தரம் தாழ்ந்து விமர்சிப்பவர்கள் அல்ல. ஆனால் பிரதமரை விமர்ச்சிப்பவர்களுக்கு தக்க பதிலடி தருவோம்." என ஆவேசமாக வானதி சீனிவாசன் பேசினார்.


தொடர்ந்து பேசிய அவர், "3 ஆண்டு கால திமுகவின் ஆட்சி மோசமான ஆட்சி. தாங்க முடியாத சுமையில் மக்கள் தவித்து கொண்டு இருக்கிறார்கள். பத்து ஆண்டுகளாக பிரதமர் மோடி சிறப்பான‌ ஆட்சி தந்துள்ளார். இந்த தேர்தல் அடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என்பதை முடிவு செய்யும் தேர்தல். இண்டி கூட்டணி சுயநலத்திற்காக உருவாக்கப்பட்ட கூட்டணி. பிரதமர் நாட்டிற்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் கூட்டணியை நிறைவு செய்யும் பணிகளில் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். 19 ம் தேதி சேலத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் பங்கேற்கிறார்கள். தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு ஆகியவை இரண்டு மூன்று நாட்களில் நிறைவு பெறும்." என கூறினார் வானதி சீனிவாசன்.


மேலும் படிக்க | அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள்! இந்த விஷயங்களில் கவனம் தேவை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ