தமிழக மீனவர்கள் 21 பேர் இலங்கை கடற்படையால் கைது: கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டு இருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேரை அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்தனர்.
தமிழக மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் செல்லும் போது அவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகின்றன. கடந்த 13 ஆம் தேதி காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு மீனவக் கிராமத்தைச் சேர்ந்த ஜெயமதி என்பவருக்குச் சொந்தமான விசைப் படகில் காரைக்கால் மற்றும் தமிழக மீனவர்கள் 15 பேர் மீன் பிடித்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 15 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து 500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க சென்றிருந்தனர். இவர்கள் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் 21 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி சிறைப் பிடித்துள்ளனர்.
மேலும் படிக்க | அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள்! இந்த விஷயங்களில் கவனம் தேவை!
மீனவர்களை 2 விசைப்படகுகளுடன் கைது செய்த இலங்கை கடற்படை அவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்களின் கிராமங்களில் கடும் கொந்தளிப்பை ஏற்ப்டுத்தியுள்ளது.
கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது. மீனவர்களை கைது செய்யும் இலங்கை கடற்படை அவர்களின் படகுகளை பறிமுதல் செய்து விட்டு விடுவிக்க மறுப்பதால் மீனவர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகிவருகின்றனர்.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் அத்துமீறி கைது செய்வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு மீனவர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இருந்தாலும் இத்தகைய சம்பவங்கள் தொடர் கதையாக நடந்து கொண்டிருப்பது மீனவர்களுக்கு பெரும் வேதனையை கொடுத்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ