சென்னை: லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பி.கோபாலநாயுடு, பொதுச்செயலாளர் ஜி.ஆர்.சண்முகப்பா ஆகியோர் சென்னையில் நேற்று கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர் அப்போது அவர்:-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெட்ரோல், டீசல் மீதான வாட் (VAT) வரி உயர்வு நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாதது. இதனால் லாரிகள் உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். எனவே இந்த விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும். 


ஆண்டுக்கு ஒரு லாரியின் பெயரில் ரூ.21000 மட்டும் தான் ரோட் டாக்ஸ் வரி செலுத்தப்படுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த இன்சூரன்சு உயர்வு மிகப்பெரிய கொள்ளை ஆகும். தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் மத்திய அரசின் ஒப்பந்த காலம் முடிந்த பின்னரும் சுங்க வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனை உடனடியாக நிறுத்த வேண்டும்.


முக்கியமாக சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து (ஜி.எஸ்.டி) லாரி உரிமையாளர்களுக்கு முழுவதும் விலக்கு அளிக்க வேண்டும். மோட்டார் வாகன சட்டத்தை காட்டி அதிக அபராதம் விதிப்பதையும் நிறுத்திட வேண்டும்.


மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து வருகிற 30-ந்தேதி (வியாழக்கிழமை) முதல் தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த பால், தண்ணீர், மருந்துகள் ஏற்றிச்செல்லும் லாரிகள் தவிர மற்ற எல்லா சரக்கு லாரிகளும் ஓடாது. கோரிக்கைகள் ஏற்பதில் தாமதம் ஏற்படும் வகையில் போராட்டம் மேலும் தீவிரமடையும்.


இவ்வாறு அவர்கள் கூறினர். N