வெறுப்புப் பிரச்சாரத்தைத் தடுக்க சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என விடுதலை கட்சிகள் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடுகையில்., "மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததற்குப் பிறகு நாடெங்கும் வெறுப்புக் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. பாஜக-வின் முன்னணித் தலைவர்களே வெறுப்புப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.


டெல்லி கலவரத்துக்கு இத்தகைய வெறுப்புப் பேச்சுகளே காரணம் என்று சுட்டிக்காட்டிய டெல்லி உயர்நீதிமன்றம் அப்படி பேசிய பாஜக தலைவர்கள் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி இருக்கிறது.



இனப்படுகொலைகள் நிகழ்வதற்கு வெறுப்புப் பிரச்சாரமே தூண்டுகோலாக அமைகிறது என்பதை உலக அளவில் பார்த்து வருகிறோம்.


இதை உணர்ந்துதான் உச்சநீதிமன்றம் வெறுப்புப் பிரச்சாரத்தைத் தடுப்பதற்கு புதிய சட்டம் ஒன்றை இயற்றவேண்டுமென மத்திய அரசை அறிவுறுத்தியதோடு,அதற்கான மசோதா ஒன்றைத் தயாரித்துத் தருமாறு 2013 ஆம் ஆண்டு இந்திய சட்ட ஆணையத்துக்கு உத்தரவிட்டது.


அதனடிப்படையில் அந்த மசோதாவை தயாரித்து 2017ஆம் ஆண்டு சட்ட ஆணையம் மத்திய அரசிடம் வழங்கிவிட்டது. அந்த சட்ட மசோதாவை மத்திய அரசு இதுவரை பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தாமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளது.


வெறுப்புப் பேச்சுகளும், வெறுப்புக் குற்றங்களும் அதிகரித்து வரும் நிலையில் உடனடியாக சட்ட ஆணையம் தயாரித்துத் தந்த அந்த மசோதாவைப் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்த வேண்டும், அதை சட்டமாக்க வேண்டும்." என குறிப்பிட்டுள்ளார்.