மாணவி பாத்திமா லத்திப் தற்கொலைக்கு உயர் விசாரணைக் கோரி இன்று மனிதவள மேம்பாட்டுத் அமைச்சர் திரு.ரமேஷ் பொக்ரியால் அவர்களிடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமா கோரிக்கை மனு அளித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை ஐஐடி கல்லூரியில் படித்து வந்த மாணவி பாத்திமா லத்தீப் கடந்த 8-ஆம் தேதி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரின் தற்கொலைக்கு இணை பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் தான் காரணம் என பாத்திமாவின் பெற்றோர் குற்றம்சாட்டி வருகின்றனர்.


இதனைத்தொடர்ந்து சென்னை ஐஐடி பேராசிரியர்கள், பாத்திமாவின் சக தோழிகள் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடைபெற்றது. மேலும், பாத்திமாவின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர்.



இதனிடையே இதே கோரிக்கையை வலியுறுத்தி சென்னை ஐஐடி-யில் பயிலும் 11 மாணவ, மாணவிகள் கல்லூரி வளாகத்திலேயே உண்ணாவிரதத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.


மேலும், பாத்திமா தற்கொலை போன்றவைகள் இனி தொடராமல் இருக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இம்மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். பாத்திமா தற்கொலை சம்பந்தப்பட்ட குற்றவாளியை விரைந்து பிடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.


இந்நிலையில் பாத்திமா லத்திப் தற்கொலைக்கு உயர் விசாரணைக் கோரி இன்று மனிதவள மேம்பாட்டுத் அமைச்சர் திரு.ரமேஷ் பொக்ரியால் அவர்களிடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமா கோரிக்கை மனு அளித்துள்ளார்.