அண்ணாமலைக்கு அம்பேத்கர் புத்தகம் பார்சல் - திருமாவளவன் அதிரடி
அம்பேத்கர் எழுதிய புத்தகங்களை தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு அனுப்ப இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார்.
அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளில் சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும், தமிழக பா.ஜ.கவினரும் மோதிக் கொண்டனர். அப்போது முதல், இருகட்சிகளிடையே நாள்தோறும் வார்த்தைபோர் நீண்டு விவாதம் வரை வந்திருக்கிறது. பிரதமர் மோடி குறித்து தனியார் நிறுவனம் எழுதிய புத்தகத்துக்கு முன்னுரை எழுதியிருந்த இசைஞானி இளையராஜா, மோடியின் ஆட்சியைப் பார்த்து அம்பேத்கரே பெருமைப்படுவார் எனக் கூறியிருந்தார்.
இளையராஜாவின் இந்த கருத்துக்கு விசிகவினர் கடும் எதிர்ப்பு தெரிவிக்க, தமிழக பா.ஜ.க இளையராஜாவுக்காக களத்தில் குதித்தது. தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேசும்போது, பிரதமர் மோடி அருந்ததியர் மக்களுக்காக ஏராளமான திட்டங்களை செய்துள்ளார். அதனால் அவரை அம்பேத்கருடன் ஒப்பிடுவதில் தவறில்லை என்று கூறியதுடன், அம்பேத்கர் குறித்து தன்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க திருமாளவளவன் தயாரா? என்றும் வினவினார். இதற்கு பதில் அளித்த திருமாவளவன், அரசியலில் சப்ஜூனியரான அண்ணாமலையுடன், தன் கட்சியைச் சேர்ந்த சப்ஜூனியர் ஒருவரை விவாதிக்க அனுப்பி வைக்கிறேன் எனக் கூறினார்.
விசிகவைச் சேர்ந்த சங்கத் தமிழனும் அண்ணாமலைக்கு நேரடியாக போன்போட்டு விவாதிக்க தயாராக இருப்பதாக கூறினார். அவரின் அழைப்புக்கு பதில் அளித்த அண்ணாமலை பா.ஜ.க அலுவலகத்துக்கு 26 ஆம் தேதி வருமாறு கேட்டுக் கொண்டார். இந்நிலையில், தமிழக பா.ஜ.க அலுவலகத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேரில் செல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ள திருமாவளவன், ’டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும்’ மற்றும் அம்பேத்கரின் ’இந்து மதத்தின் புதிர்கள்’ஆகிய புத்தகங்களை அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட இருப்பதாக கூறியுள்ளார்.
மேலும், 20 ஆயிரம் புத்தகங்களை படித்திருக்கும் அண்ணாமலை அம்பேத்கர் குறித்து புத்தகங்கள் தேவையெனில் அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க தயாராக இருப்பதாகவும் அல்லது அம்பேத்கர் மணி மண்டபத்துக்கு வந்து பெற்றும் செல்லலாம் என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, திருவாசகம், இந்துத்துவ அம்பேத்கர் உள்ளிட்ட புத்தகங்களை தானும் அனுப்பி வைப்பதாக கூறியுள்ளார்.
மேலும் படிக்க | அதிமுக பிரமுகர் மர்ம மரணம்: கொலைக்கான பின்னணி என்ன? காவல்துறை விசாரணை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR