இளையராஜாவுக்கு ஆர்.எஸ்.எஸ் குறி - பரபரப்பை கிளப்பிய திருமாவளவன்
இசைஞானி இளையராஜாவுக்கு ஆர்.எஸ்.எஸ். குறி வைத்திருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
மோடியோடு அம்பேத்கரை ஒப்பிட்டு இளையராஜா எழுதிய முன்னுரை பெரும் விவாதத்தை கிளப்பியிருக்கிறது. அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில் சென்னை எக்மோரில் நடந்த இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பியுமான திருமாவளவன் இளையராஜா விவகாரம் குறித்து பேசினார்.
இதுதொடர்பாக பேசிய திருமாவளவன், “சமூகத்தில் யார் மக்களோடு மக்களாக நெருக்கமாக உள்ளனரோ, அவர்களை ஆர்.எஸ்.எஸ்காரர்கள் சந்திப்பார்கள். இப்படித்தான் ஆர்எஸ்எஸ்காரர்கள் இளையராஜாவை சுற்றிவளைத்து இருக்கக்கூடும் என நினைக்கிறேன்.
அம்பேத்கர் இருந்திருந்தால் நரேந்திர மோடியைப் பாராட்டி இருப்பார் என இளையராஜா சொல்லி இருக்கிறார். இளையராஜா போன்ற நபர்களைக் குறி வைப்பதே ஆர்.எஸ்.எஸ் நோக்கம். இளையராஜா பாவம் என்று அவர் மீது இரக்கம் காட்டவே விரும்புகிறேன்.
மேலும் படிக்க | மோடி - அம்பேத்கர் ஒப்பீடு... தேசிய அளவில் இளையராஜாவுக்கு வலுக்கும் ஆதரவு
சமூகத்தை இரு வேறு துருவங்களாக பிளவுப்படுத்தவே அவர்கள் விரும்புகிறார்கள். அதற்கு நாம் வழி வகுக்கக் கூடாது. இதை முறியடிக்க வேண்டிய பொறுப்பு இஸ்லாமியர் அல்லாத ஜனநாயக சக்திகளிடம் உள்ளது. சங்பரிவார் கும்பலை எதிர்க்கும் நபர்கள் இந்துக்களுக்கு எதிரானவர்களாகச் சித்தரிக்கப்படுகிறார்கள்.
இதை எதிர்கொள்ள காங்கிரஸ் போன்ற பெரிய கட்சிகளுக்கே அச்சம் உள்ளது. ஆனால், இவர்களின் அரசியலை அம்பலப்படுத்தும் பொறுப்பு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட ஜனநாயக சக்திகளிடம் உள்ளது” என்றார்.
மேலும் படிக்க | இளையராஜா விவகாரம் வம்புக்கு இழுக்கப்படுகிறதா திமுக
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR