“அமைதியாக இருக்க வேண்டும்” ஆதவ் அர்ஜுனாவிற்கு வார்னிங் கொடுத்த திருமா!
Thol Thirumavalavan Talks About Aadhav Arjuna : எனக்கு யாரும் எந்த அழுத்தமும் கொடுக்க முடியாது குறை படி ஆதவ்அர்ஜுன் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் - திருச்சி விமான நிலையத்தில் தொல்.திருமாவளவன் பேட்டி.
Thol Thirumavalavan Talks About Aadhav Arjuna : கும்பகோணத்தில் நடைபெற உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி திருமணத்தில் பங்கு கொள்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பர நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சிதமிழர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
“மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நிறைவேற்ற பார்க்கிறார்கள் அரசமைப்பு சட்டத்தை போற்றி, புகழ்ந்து கொண்டே அம்பேத்கரை பாராட்டி பேசி அரசமைப்பு சட்டம் மீது மூர்க்கமான தாக்குதலை பாஜக அரசு நடத்தி வருகிறது. இவர்கள் ஏற்கனவே 375 ஆவது சட்டத்தைக் கொண்டு வந்து அரசமைப்பு சட்டத்திற்கு எதிராக தாக்குதல் நடத்தினார்கள், முன்னேறிய வகுப்புகளுக்கு பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கு இடஒதுக்கீடு சட்டத்தை கொண்டு வந்தார்கள், 370 வது சட்டப்பிரிவை நீக்கினார்கள், சிஏஏ சட்டத்தை கொண்டு வந்தார்கள் இதெல்லாம் அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது. வழிபாட்டு தளங்களுக்கான சட்டம் 1948 கொண்டு வந்து சட்டத்தை பொருட்படுத்தாமல் அதனை அவமதிக்கும் வகையில் நீதிமன்றம் வழியாக ராமர் கோயிலை கட்டி முடித்தனர்,
எனவே, தேசிய அளவில் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து இந்த ஆபத்தை தடுக்க அனைவரும் அணி திரள வேண்டும்” என்று கூறினார்.
மேலும், “இது குறித்து விவாதத்தில் நாடாளுமன்றத்தில் கருத்துக்களை பதிவு செய்ய நா முயன்ற போது எனக்கு அனுமதிக்கவில்லை. தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாடு அரசு விடுவித்த கோரிக்கையான 2475 கொடியை வெள்ள நிவாரணமாக கேட்ட பொழுது அதனை அலட்சியப்படுத்தி 944.80 கோடியை கொடுத்துள்ளனர். தமிழகத்திற்கு தேவையான உரிய நிதியை இந்திய ஒன்றிய அரசு வழங்க வேண்டும். அரசாங்கத்திற்கு எதிராக ஏதேனும் மாற்றுக் கருத்து கூறினால் இரண்டு, ஒன்று உறுப்பினர்கள் கொண்ட கட்சிகளை அனுமதிப்பதில்லை இதுபோன்று காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகளை அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது.
அம்பேத்கருக்கு நினைவிடம் அமைத்து பெருமைப்படுத்தினாலும் இன்னொரு புறம் அவருடைய சிந்தனை முழுமையாக சிதைக்கும் வகையில் செயல்படுவது அவர்களது நோக்கத்தை தெரியப்படுத்துகிறது. அரசியலமைப்பு சட்டத்தை சிதைக்கும் வகையில் வெளிப்படையாக செயல்படுகின்றனர் என்பது நிதர்சனமான உண்மையாகும் இதை சுட்டிக்காட்ட முயன்ற போது நாடாளுமன்றத்தில் என் ஒலி வாங்கி அனைக்கப்பட்டது” என்றார்.
மேலும் படிக்க | “நான் பலவீனமானவன் அல்ல..” விஜய் பேச்சுக்கு திருமாவளவன் பதிலடி!
இதையடுத்து, “வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 5000 நிதி உதவி வழங்க வேண்டும் என விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். வேல் முருகன் திமுக அரசை விமர்சனம் செய்வது அவரது நிலைப்பாடு. அது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும். ஆனால், அரசியலுக்காக தான் கூட்டணி கட்சிகளை திமுக பயன்படுத்துகிறது என்கிற அவரது விமர்சனத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.” என்று கூறினார்.
ஆதவ் அர்ஜுனாவிற்கு வார்னிங்!
அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் நான் பங்கேற்காதது குறித்து ஏற்கனவே கருத்து தெரிவித்து விட்டேன். என்னை யாரும் அழுத்தம் கொடுத்து இணங்க வைக்க முடியாது. சில நேரங்களில் முதல்வரை பார்க்க முடியாத தருணங்களில் மற்ற அமைச்சர்களை பார்த்து பேசுவது உண்டு அதன்படி, அமைச்சர் எ.வ. வேலுவை நான் சந்தித்தேன். ஆதவ் அர்ஜுன் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கக்கூடிய சூழலில் இதுபோன்ற முரண்பாடான கருத்தை கூறுவது தவறு அவர் அப்படி பேசக்கூடாது. ஆறு மாதத்திற்குப் பின்பு கட்சியில் இணைந்து பணியாற்ற வேண்டுமென்றால் அவர் அமைதியாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அவருக்கு வேறு ஒரு செயல் திட்டம் இருப்பதால்தான் இது போன்ற கருத்துக்களை தொடர்ந்து பேசி வருகிறார் என்பது தற்பொழுது உணர முடிகிறது. எங்கள் கட்சியின் நடைமுறையின் அடிப்படையில் தான் அவர் நீக்கப்பட்டுள்ளார் என தெரிவித்தார்.பேட்டியின் போது திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் புல்லட்.லாரன்ஸ், ஜெயக்குமார், மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.
மேலும் படிக்க | விசிக-விலிருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம்!! அதிரடி காட்டிய திருமா..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ