ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான, ஆதரவு வழக்குகளை இணைக்க HC மறுப்பு!
ஸ்டெர்லைட் ஆலைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கை ஜூன் 27 ஆம் தேதி ஒத்திவைப்பு!!
ஸ்டெர்லைட் ஆலைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கை ஜூன் 27 ஆம் தேதி ஒத்திவைப்பு!!
தமிழக அரசால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும்படி உத்தரவிடும் அதிகாரம், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திற்கு இல்லை என்றும், இது குறித்து வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மேலும், மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு இயக்கம், தொழில் அமைப்புகள் ஆலைக்கு ஆதரவாக வழக்கில் தங்களை இணைக்க கோரி மனுத்தாக்கல் செய்தனர். இதனிடையே, நாம் தமிழர் கட்சி நிர்வாகி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பு ஆகியவை ஸ்டெர்ஸலைட் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்தனர்.
இந்த மனுக்கள் மீதான வழக்கு விசாரணை, நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்புராயன் அமர்வு முன்பு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மற்றும் ஆதரவான வழக்கில் இரண்டு மனுக்களையும் இணைக்க மறுப்பு தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஜூன் 27-ஆம் தேத்திக்கு ஒத்திவைத்தது.
உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூட வேண்டும் என மக்களின் 100 ஆவது நாள் போராட்டம் கடந்த மே மாதம் 22 ஆம் தேதி காவல்துறையினர் துப்பாக்கிச்சூடும் தடியடியும் நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.