தூத்துக்குடி அருகேயுள்ள குமரெட்டியாபுரம் கிராமபகுதியில், வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலை செயல்பட்டு வந்தது. இந்த ஆலை வெளியிடும் நச்சு புகை காரணமாக, ஆலைக்கு அருகில் வசித்து வந்த கிராம மக்களுக்கு மூச்சுத்திணறல், நெஞ்சு எரிச்சல், கருச்சிதைவு, புற்றுநோய், சிறுநீரகக் கோளாறு ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டனர். இதனால் ஆலையை மூடகோரி தொடர் போராட்டம் நடைபெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தொடர் போராட்டத்தின் 100_வது நாளான அன்று காவல்துறைக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் காவல் துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.


இதனையடுத்து, தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்து, மேலும் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து ஆலை மூடப்பட்டது.


தற்போது  ஆலையை நடத்தி வந்த வேதாந்தா குழுமம் சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.