ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்ய வேதாந்தா நிறுவனம் முடிவு? ரூ.4,500 கோடிக்கு விற்க திட்டம்
தமிழ்நாட்டில் இருக்கும் வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமான தாமிர ஆலையை சுமார் 4500 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய வேதாந்தா நிறுவனம் முடிவு செய்து அதற்கான பணிகளை மீண்டும் தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடியில் இருக்கும் ஸ்டெர்லைட் ஆலை மக்களின் பெரும்போராட்டத்துக்குப் பிறகு மூடப்பட்டிருக்கிறது. இந்த ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்ததால், இந்த ஆலை தொடர்ந்து தமிழ்நாட்டில் இயங்கக்கூடாது என்பது அப்பகுதி மக்கள் உறுதியாக உள்ளனர். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் (டிஎன்பிசிபி) உத்தரவின் பேரில் ஆலை மூடப்பட்டுளது. இதனால், இந்த ஆலையை விற்பனை செய்யும் முடிவுக்கு வேதாந்தா நிறுவனம் வந்திருப்பதாக கூறப்படுகிறது. 2021 ஆம் ஆண்டு எடுத்த முயற்சிக்கு எதிர்பார்த்த வரவேற்பு இல்லாத நிலையில், மீண்டும் ஆலையை விற்பனை செய்யும் பணிகளை அந்த நிறுவனம் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
இதனையொட்டி, ஆலைக்குள் இருக்கும் கழிவுகளை உச்சநீதிமன்ற அனுமதியுடன் தொடங்கியுள்ளது. தமிழக அரசு சார்பில் உருவாக்கப்பட்டுள்ள குழுவின் மேற்பார்வையின் கீழ் இந்த பணிகள் தொடங்கியுள்ளன. இதனையொட்டி ஸ்டெர்லைட் ஆலை இருக்கும் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. கழிவுகள் அகற்றும் பணிகள் முடிந்தவுடன் அடுத்தகட்ட பணிகளை செயல்படுத்துவது குறித்து வேதாந்தா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனிடையே ஆலையை விற்பதற்கான பணிகளும் இன்னொரு புறம் முழு வீச்சில் தொடங்கியிருக்கிறது.
மேலும் படிக்க | செந்தில் பாலாஜியை பாஜகவிற்கு அழைக்கிறார் அண்ணாமலை: திமுக எம்.பி செந்தில்குமார் பளீர்
பிஸ்னஸ் இன்சைடர் தகவலின்படி, தற்போது வங்கியாளர்கள் சாத்தியமான ஏலதாரர்களை அணுகுவதன் மூலம் ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்து 4500 கோடி ரூபாய் திரட்ட முடிவு செய்திருக்கிறது. ஆலை இப்போது மூடப்பட்டிருப்பது தொடர்பான தீர்ப்பு ஆகஸ்ட் மாதம் வெளியாவதால் அதனை பொறுத்து அடுத்தக்கட்ட செயல்திட்டங்களில் ஈடுபட இருந்தாலும், வேதாந்தா லிமிடெட் நிறுவனத்தின் தாய் நிறுவனமான வேதாந்தா ரிசோர்சஸ் (விஆர்எல்) தனது கடனைத் திருப்பிச் செலுத்த நிதி திரட்ட அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்த யூனிட்டை விற்றதன் மூலம் திரட்டப்படும் தொகை இந்த ஆண்டுக்கான அதன் மூலதனச் செலவான 1.7 பில்லியன் டாலர்களை ஈடுகட்ட உதவும் என்றும் வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இயக்குநர்கள் குழு மற்றும் சொத்து விற்பனையால் சமீபத்தில் சரி செய்யப்பட்ட ரூ.2,100 கோடி வரையிலான டிவிடெண்ட் அப்ஸ்ட்ரீமிங் மற்றும் உள்நாட்டுப் பத்திரப் பிரைவேட் பிளேஸ்மென்ட் போன்ற பல வழிகள் இன்னும் திறந்தே இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 1.3 பில்லியன் டாலர்களை திரட்டுவதற்கான வேதாந்தாவின் சமீபத்திய முயற்சிகளின் உதவியுடன் அடுத்த சில மாதங்களில் VRL அதன் கடன் பொறுப்புகளை செலுத்தும் என்று நம்புகிறது.
மார்ச் 2023 நிலவரப்படி, VRL ஆனது பல்வேறு வங்கி டெபாசிட்டுகள், மேற்கோள் காட்டப்பட்ட பத்திரங்கள் மற்றும் பரஸ்பர நிதிகளில் $1.7 பில்லியன் குறுகிய கால முதலீடுகளைக் கொண்டுள்ளது. CreditSites இன் ஆய்வாளர்கள், தேவை ஏற்பட்டால் மற்றும் சந்தைக்கு சந்தை சாத்தியமான வெற்றியைப் பெற்றால் இது கலைக்கப்படலாம் என்று நம்புகின்றனர். ஜூன் 22 காலை, வேதாந்தா லிமிடெட் NSE-ல் 0.43 சதவீதம் உயர்ந்து ரூ 282.4.5-ல் வர்த்தகம் செய்யப்பட்டது.
மேலும் படிக்க | அரசு கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்குவது எப்போது? அறிவிப்பு இதோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ