தமிழகத்தில் நேற்று முதல் அடுத்த ஒருவாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்த ஊரடங்கு காலத்தில் தமிழகம் (Tamil Nadu) முழுவதும் இரண்டு நாள் தளர்வுகளுக்குப் பின் ஒரு வார தீவிர ஊரடங்கு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதனால் சென்னையில் (Chennai) நேற்று ஒரே நாளில் 1,400 மெட்ரிக் டன் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது அமைச்சர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார். மேலும் நேற்று ஒரு நாளில் ஊரடங்கு (Lockdown) விதிகளை மீறிய குற்றத்துக்காக சென்னையில் மட்டும் 2,409 வழக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் நேற்றைய தினமானது காய்கறிகள் மிக குறைவான விலைக்கு  விற்பனை செய்யப்படுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


ALSO READ | முழு ஊரடங்கில் ரேஷன் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி 


இந்நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் ‘காவல்துறையினர் தடுத்து நிறுத்தினால் காய்கறி, பழ வியாபாரிகள் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தரலாம்’ என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான உதவி எண்களாக 044-4568 0200, 94999 32899 என்ற எண்களில் மூன்று சக்கர வாகனம் – தள்ளுவண்டி வியாபாரிகள் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR