சென்னை கிண்டி 5 பார்லாங் சாலை - வேளச்சேரி சாலை இணைப்பில் கட்டுமானப் பணிக்காக தோண்டப்பட்டிருந்த 50 அடி ஆழமுள்ள ராட்சத பள்ளத்தில் கண்டெய்னர் விழுந்த விபத்தில், கண்டெய்னரில் இருந்த பொறியாளர் ஜெயசீலன் மற்றும் பெட்ரோல் பங்கில் பணியாற்றிவந்த நரேஷ் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். இந்த விபத்தில் தொடர்புடைய கட்டுமான மேற்பார்வையாளர்கள் எழில் மற்றும் சந்தோஷ் ஆகிய இருவரையும் வேளச்சேரி போலீசார் கைது செய்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 3ம் தேதி முதல் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கன மழை பெய்ய தொடங்கியது. இந்த நிலையில், மழை பாதிப்புகளை பார்வையிடுவதற்காக அந்தக் கட்டுமான பணிகளின் பணிதள பொறியாளர் ஜெயசீலன் அங்கு சென்றிருந்தார். அப்போது, ஏற்கனவே தோண்டப்பட்டிருந்த 50 அடி பள்ளத்தில் நீர் முழுவதுமாக தேங்கி இருந்தது. தொடர்ந்து பெய்த கன மழையின் காரணமாக திடீரென அந்த ராட்சத பள்ளத்தின் பக்கவாட்டில் மண் சரிவு ஏற்பட்டது. அப்போது அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த கண்டெய்னரும் அந்த பள்ளத்தில் விழுந்தது.


மேலும் படிக்க | வேளச்சேரி ராட்சத பள்ளத்தில் சிக்கிய ஒருவர் சடலமாக மீட்பு, இன்னொருவரை தேடும் பணி தீவிரம்


இதில், பொறியாளர் ஜெயசீலன், நரேஷ் ஆகிய இருவரும் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இதனைக் கண்ட அங்கிருந்தவர்கள் காவல்துறையினர் உதவியுடன் உடனடியாக மூவரை மீட்டனர். ஜெயசீலன் மற்றும் நரேஷ் ஆகிய இருவரையும் மீட்பதற்கு போராடி வந்த மீட்பு படையினரும், தீயணைப்பு வீரர்களும் நான்கு நாட்களாக முயற்சித்து வந்தனர்.


இன்று காலை, அந்த பள்ளத்தில் இருந்த மொத்த நீரும் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், மண்ணில் புதைந்திருந்த கண்டெய்னரை மீட்ட மீட்பு படையினர், அதில் இருந்து நரேஷ் என்பவரை பிணமாக மீட்டனர். பின்னர், ஜெயசீலனை மீட்க மேலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அவர் உயிரிழந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது. இந்த விபத்தில் உயிரிழந்த பொறியாளர் ஜெயசீலனுக்கு 11 மாதங்கள் முன்பு திருமணம் முடிந்து, தற்போது அவரது மனைவி ஒன்றரை மாதம் கர்ப்பமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த விபத்தில் தொடர்புடைய கட்டுமான மேற்பார்வையாளர்கள் எழில் மற்றும் சந்தோஷ் ஆகிய இருவரையும் வேளச்சேரி போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், மழைக் காலங்களில் வேலையை நிறுத்தாமல், வேலை ஆட்களை அங்கே ஏன் இருக்க வைத்தீர்கள் என்று இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


மேலும் படிக்க | 2015 சென்னை வெள்ளம் செம்பரம்பாக்கம் ஏரி திறப்பால் ஏற்பட்டதா? எஸ்.பி.வேலுமணி விளக்கம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ