தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் மீது அவரது மனைவி காயத்திரி நீதிமன்ற உத்தரவுப்படி உரிய நிவாரணம் வழங்கவில்லை என குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். குடும்ப பிரச்சனை காரணமாக இருவரும் நீதிமன்றத்தை நாடி 2018 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுக் கொண்ட நிலையில், உரிய ஜீவனாம்சம் தரவில்லை என தெரிவித்துள்ளார். இது குறித்து காயத்திரி செய்தியாளர்களை சந்தித்தபோது,  தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் என்னை கல்யாணம் செய்த போது, எங்க அப்பா தான் சாப்பாட்டிற்கு காசு கொடுத்தார். இன்னைக்கு 100 ஏக்கர் நிலம் இருக்கு என்று கையை விரித்து காட்டுகிறார். ஆனால் பணம் தர மாட்டேன் என்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | சத்ய பிரியா கொலை வழக்கு: கொலைகாரனை குண்டர் சட்டத்திலிருந்து விடுவித்த நீதிமன்றம்..!


வளசரவாக்கத்துல என் பெயர்ல என் அப்பா வாங்கி கொடுத்த வீடு இருக்கு. அதை அவர் ஆக்கிரமிப்பு பண்ணிக்கிட்டு இருக்கார். இவர் ஆளும் கட்சி கூட்டணி எம்எல்ஏ என்பதால், என்னால் ஒன்றுமே பண்ண முடியவில்லை. வருமானம் ரீதியாக நான் ரொம்ப கஷ்டப்படுறேன். அவருடன் 20 வருசம் வாழ்ந்துட்டேன். வெளியே வந்து படிச்சிருந்தாலோ, இல்லை வேறு யாராவது திருமணம் செய்திருந்தாலோ, என் வாழ்க்கை நிம்மதியாக இருந்திருக்கும். நல்லபடியாக இருந்திருக்கும். எங்களுக்கு 1999ம் ஆண்டு திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டோம். எங்கள் விவாகரத்து வழக்கில் 2018-ம் ஆண்டு தீர்ப்பு கிடைச்சது. மாதம் ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோர்டு உத்தரவு போட்டிருக்கு. இதுவரை அவர் இழப்பீடு கொடுக்கவில்லை. அதற்காகத்தான் கோர்ட்டுக்கு வந்திருக்கிறேன்" என தெரிவித்தார்.


இதற்கு பதில் அளித்துள்ள வேல்முருகன், அரசியல் களத்தில் நேரடியாக மோத முடியாத சங்கி கும்பல் மனைவியை தூண்டிவிட்டு தன்னுடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், " 2018- ம் ஆண்டிலிருந்து எனது மனைவி காயத்ரி கருத்து முரண்பாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. எனது அரசியலை பிடிக்காத சங்பரிவார கூட்டம், எனது மனைவிக்கு காஞ்சிபுரம் பாஜக மாவட்ட செயலாளர் பதவி கொடுத்து என்னை பழிவாங்க நினைக்கிறார்கள். 


சங்கிகளின் கும்பலுக்கு நான் எச்சரிக்கை செய்கிறேன். உங்களுக்கு தெம்பு இருந்தால் திராணி இருந்தால் தைரியம் இருந்தால் எனது பொதுவாழ்வில் லஞ்சம் வாங்கியதையோ, அரசு சொத்தை கைப்பற்றியது குறித்தோ ஒரு சின்ன குற்றச்சாட்டை வைத்தோ என்னோடது வீட்டுக்கு அமலாக்க துறையை அனுப்ப முடியாது. நான் செய்யும் செயல்கள் சனாதன சங்கிகளின் கும்பலுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. எனது மனைவிக்கு பதவியை கொடுத்து எனது அரசு பொதுவாழ்வை முடக்க நினைக்கிறார்கள். இதை எதிர்கொள்ள துணிவு இல்லாதவர்கள் அவதூறு பரப்பி பெண்களை பயன்படுத்தி பழிவாங்க நினைத்தால் விபரீதம் ஆகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என எச்சரித்துள்ளார்.


மேலும் படிக்க | வெங்காயத்தின் விலையை கேட்டாலே கண்ணீர் வருகிறது! ஆர்.பி. உதயகுமார்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ