சத்ய பிரியா கொலை வழக்கு: கொலைகாரனை குண்டர் சட்டத்திலிருந்து விடுவித்த நீதிமன்றம்..!

கடந்த ஆண்டு மாநிலத்தையே உலுக்கும் வகையில் நடைப்பெற்ற பரங்கிமலை கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பம் ஒன்று நிகழ்ந்துள்ளது.  

Written by - Yuvashree | Last Updated : Jul 10, 2023, 01:48 PM IST
  • கடந்த ஆண்டு மின்சார ரயில் முன் தள்ளி கொலைசெய்யப்பட்ட பெண், சத்ய பிரியா.
  • அவரை ஒருதலையாக காதலித்த சதீஷ் ரயில் முன் அவரை தள்ளி கொலை செய்தார்.
  • இவரது வழக்கு விசாரணை இன்று நீதிமன்றத்திற்கு வந்தது.
சத்ய பிரியா கொலை வழக்கு: கொலைகாரனை குண்டர் சட்டத்திலிருந்து விடுவித்த நீதிமன்றம்..! title=

கடந்த ஆண்டு காதலனே காதலியை ரயல் முன் தள்ளி கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே திரும்பி பார்க்க வைத்தது. இதன் வழக்கு விசாணையின் போது கொலை செய்த காதலன் மீது சில மாதங்களுக்கு முன்பு குண்டர் சட்டம் பாய்ந்தது. இதையடுத்து, அந்த சட்டத்தை தற்போது ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மேலும் படிக்க | திடீரென வீசப்பட்ட பெட்ரோல் வெடிகுண்டு... உயர் தப்பிய திமுக எம்எல்ஏ - கடலூரில் பரபரப்பு!

இளம் பெண் ரயில் முன் தள்ளி கொலை

சென்னை பரங்கிமலை காவல் குடியிருப்பில் வசித்து வந்தார் கல்லூரி மாணவி சத்யபிரியா அதே குடியிருப்பில் வசித்த சதீஷ் என்பவர், சத்யா பிரியாவை காதலித்ததாகவும் அவர் எங்கு சென்றாலும் அவரை சதீஷ் பின்தாெடர்ந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 13ஆம் தேதி, வழக்கம் போல கல்லூரிக்கு செல்வதற்காக சத்யபிரியா ரயில் நிலையத்தில் வருகைக்காக காத்துக்கொண்டிருந்தாார். அப்போது அங்கு வந்த சதீஷ், சத்யபிரியாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். சண்டை முற்றிப்போன நேரத்தில் சரியாக ரயில் வரும் போது சத்ய பிரியாவை ரயில் முன் தள்ளி கொலை செய்தார், சதீஷ். இந்த சம்பவம் தமிழக மக்கள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.  

குண்டர் சட்டத்தில் கைதி:

சத்யபிரியா சம்ப இடத்திலேயே உயிரிழந்ததை தொடர்ந்து, சதீஷை பிடித்த போலீஸார், இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்தனர். கொலை நடந்ததற்கு மறுநாளே சதீஷை சிறையில் அடைத்தனர். இதையடுத்து, சதீஷ் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க  சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து சதிஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். 

குண்டர் சட்டம் ரத்து:

சதீஷின் வழக்கு  நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் ஆர்.சக்திவேல் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. சதீஷ் தரப்பில், கைது உத்தரவில் செப்டம்பர் 27 என தமிழிலும், அக்டோபர் 13 என ஆங்கிலத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது, முரணாக இருப்பதாக சுட்டிக்காட்டி வாதிடப்பட்டது.இதற்கு காவல்துறை தரப்பில் போதிய விளக்கம் தராத நிலையில், பரங்கிமலை சதீஷ் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பலியான பெண்ணின் தந்தை உயிரிழப்பு:

உயிரிழந்த கல்லூரி மாணவி சத்யாவின் அப்பா மாணிக்கம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். தன் மகள் இறந்த செய்தியை கேட்டவுடன் உருகுலைந்து போன அவர், சில நாட்களிலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இறந்து போன சத்ய பிரியாவின் தாயும் புற்றுநோய்க்கு ஆளாக்கப்பட்டவர். இப்படி, ஒட்டுமொத்த குடும்பத்தையே சீரழித்த சதீஷை வெளியில் விடக்கூடாது என பலர் போர்கொடி தூக்கினர். ஆனால், இன்று வந்துள்ள இந்த தீர்ப்பு, பலருக்கும் அதிர்ச்சி தரும் வகையில் அமைந்துள்ளது. 

மேலும் படிக்க | பாமக நிர்வாகி படுகொலை! தமிழகத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News