கலைஞரை காண சென்னை வந்தடைந்தார் குடியரசு துணை தலைவர்!
விமான நிலையத்தில் வெங்கையாவுக்கு ஆளுநர் பன்வாரிலால், துணை முதல்வர் ஓபிஎஸ், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அமைச்சர் ஜெயக்குமார் வரவேற்பு!!
விமான நிலையத்தில் வெங்கையாவுக்கு ஆளுநர் பன்வாரிலால், துணை முதல்வர் ஓபிஎஸ், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அமைச்சர் ஜெயக்குமார் வரவேற்பு!!
வயது முதிர்வு மற்றும் உடல் நிலை சோர்வு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் கடந்த சில நாட்களாக மருத்துவ கண்கானிப்பில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு அவருக்கு ரத்த அழுத்தக் குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின், அழகிரி, ராஜாத்தி அம்மாள், கனிமொழி மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பலரும் கோபாலபுரம் இல்லத்திற்கு வந்தடைந்தனர். பின்னர் நள்ளிரவில் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு தலைவர் கருணாநிதி அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
காவிரி மருத்துவமனையில் மருத்துவ கண்கானிப்பில் இருக்கும் திமுக தலைவர் கருணாநிதி அவர்களை தலைவர்கள் பலரும் சந்தித்து வருகின்றனர். தலைவர்கள் பொதுமக்கள் என பலரும் கருணாநிதி உடல் நலம்பெற வேண்டும் என பிராத்தனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி அவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிய இன்று குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு சென்னை வந்தடைந்தார். இதயைடுத்து, சென்னை விமான நிலையத்தில் வெங்கையாவுக்கு ஆளுநர் பன்வாரிலால், துணை முதல்வர் ஓபிஎஸ், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் வரவேற்றனர்.
இதை தொடர்ந்து, சென்னை ஆராய்ச்சி மைய விழாவில் வெங்கய்யா நாயுடு பேசுகையில்... ஊட்டச்சத்து குறைபாடு நாட்டின் முக்கிய பிரச்னைகளில் ஒன்றாக உள்ளது. நமக்கு தேவையான உணவு பொருட்களை வீட்டிலேயே வளர்க்க வேண்டும் என்றும் நாம் ஜங்க் உணவை தேடிச்செல்கிறோம், இந்த முறையை நாம் முழுமையாக மாற்ற வேண்டும் என்றும் உரையாற்றினார்.