முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக-வில் பிளவு ஏற்பட்டு ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும், சசிகலா ஆதரவு பெற்ற டிடிவி தினகரன் தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் டிடிவி தினகரன் அணியை சேர்ந்த அமைச்சர் விஜயபாஸ்கர், வருமான வரி சோதனையில் சிக்கியதால் அவருக்கு எதிராக அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கினர். 


இதற்கிடையே, தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். 


அதன்படி, ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிமுக (அம்மா) சார்பில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.


இந்த குழுவில் உள்ளவர்கள் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும்,  டிடிட்வி தினகரனையும் சந்தித்து பேசினர்.


இந்நிலையில் இன்று பேட்டி அளித்த ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகங்களை தீர்க்க வேண்டும். சசிகலா குடும்பம் அதிமுகவில் இருக்கும் வரை பேச்சு வார்த்தை கிடையாது என கூறினார்.


இந்த நிலையில்  டிடிவி தினகரை சந்தித்து பேசிய பின் வெற்றிவேல் எம்.எல்.ஏ கூறியதாவது:-


பன்னீர்செல்வம் அணியுடன் தனிப்பட்ட முறையில் எந்த விரோதமும் இல்லை, கருத்து வேறுபாடுகள் இருக்கும். அணிகள் இணைவது குறித்து டிடிவி தினகரனுக்கு தெரியாமலேயே அமைச்சர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிவிட்டது என ஓபிஎஸ் குறித்து எம்எல்ஏ வெற்றிவேல் விமர்சனம் செய்தார்.சசிகலா, டிடிவி தினகரன் தொடர்ந்து பொறுப்பில் இருக்க வேண்டும். 4 பேருக்காக யாரிடமும் சென்று மண்டியிடமாட்டோம். அணிகள் இணைவது குறித்து குழு எதுவும் அமைக்கபடவில்லை.முதல்வர் உள்பட 6 முக்கிய அமைச்சர்கள் பொறுப்பை  ஓபிஎஸ் அணி கேட்பதாக எழுதி கொள்ளுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.