சென்னை புரசைவாக்கம், கெல்லீஸ் சிக்னல் அருகே கடந்த 19ஆம் தேதி இரவு காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக ஆட்டோவில் வந்த திருவல்லிக்கேணியை சேர்ந்த சுரேஷ் மற்றும் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தைச் சேர்ந்த விக்னேஷ் ஆகியோரடம் சோதனை மேற்கொண்டுள்ளனர். சோதனையில் அவர்கள், ஆட்டோவில் கஞ்சா பொட்டலங்கள் மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.  இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீஸார் விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு வைத்து விக்னேஷ் உயிரிழந்தாகவும் கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது. அப்போது பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்த எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, காவல்துறை தரப்பில் குற்றத்தை மறைக்க விக்னேஷ் குடும்பத்துக்கு ஒரு லட்சம் கொடுக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். தொடர்ந்து பேசிய அவர், சிபிசிஐடி விசாரித்து வரும் இவ்வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனவும், விக்னேஷ் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிதி உதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.


மேலும் படிக்க | தனியார் சொகுசு ஓட்டல் அதிபரை கடத்திய கும்பல் போலீசில் சிக்கியது எப்படி ?


இதற்கு விளக்கம் அளித்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின், கஞ்சா போதையில் இருந்த விக்னேஷ்,காவல்துறை விசாரணைக்கு வர மறுத்துள்ளார். அது மட்டும் இன்றி காவல்துறையினரை கத்தியை காட்டி மிரட்டவும் செய்துள்ளார். இதனால், போலீஸார் அவரை கைது செய்து விசாரணைக்காக அழைத்துச்சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து விக்னேஷ் தொடர்பாக திரட்டப்பட்ட தகவல்களில் அவர் மீது ஏற்கனவே கொலை, கொள்ளை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் இருப்பதாக குறிப்பிட்ட முதலமைச்சர், விசாரணைக்கு அடுத்த நாள் காலை இருவருக்கும் உணவு வழங்கப்பட்ட நிலையில் சாப்பிட்ட பிறகு விக்னேஷ்க்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.


தொடர்ந்து பேசிய முதலமைச்சர், இதனை தொடர்ந்து விக்னேஷை போலீஸார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற நிலையில் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, இறப்பு குறித்து சந்தேக மரணம் என வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருவாத கூறினார். மேலும், விசாரணைக் கைதி மரணம் தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும், குற்றம் சாட்டப்பட்ட காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின் விக்னேஷ் மரணத்தில் உரிய நீதி கிடைக்கும்  என்பதில் சந்தேகம் வேண்டாம் எனவும் கூறினார். இதனை தொடர்ந்சு உயிரிழந்த விக்னேஷ் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு தரப்படும் என குறிப்பிட்ட முதலமைச்சர் விக்னேஷ் உடன் இருந்த சுரேஷ்-க்கு அரசு செலவில் உயர்சிகிச்சை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். 


மேலும் படிக்க | புதுக்கோட்டை: காதலை கைவிட மறுத்த மகள் - உருட்டுக்கட்டையால் அடித்துக்கொன்ற தாய்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR