தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது நடித்துள்ள "லியோ" படம் வரும் அக்டோபர் மாதம் 19ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்திற்கான வேலைகள் மும்முரமாக ஒரு புறம் நடைபெற்று வர, மற்றொரு புறம் விஜய் அரசியலுக்கு தயாராகி வருவதாக, அரசியல் முன்னெடுப்புகளை மேற்கொள்ள திட்டடுமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  அரசியலுக்கு ஆயத்தமாகும் வகையில் பல்வேறு முன்னேற்பாடுகளை தனது மக்கள் இயக்கத்தின் மூலம் செய்து வருகிறார் விஜய்.  தலைவர்களின் சிலைக்கு மாவட்ட நிர்வாகிகள் மூலம் மாலை அணிவிப்பது, தொகுதி வாரியாக ஏழை, எளிய மக்களுக்கு உணவு உட்பட பல நலத்திட்ட உதவிகளை வழங்குவது, கண் தானம் மற்றும் இரத்த தான முகாம்களை நடத்துவது, உலக பட்டினி தினத்தில் தொகுதி வாரியாக மக்களுக்கு உணவு வழங்குவது என தனது மக்கள் இயக்க நிர்வாகிகள் மூலம் அரசியலுக்கு அடித்தளம் போட்டு வருகிறார் விஜய்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | விஜய்யா? ரஜினியா? தென்னிந்திய திரையுலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் யார்?


இந்த சூட்டை அதிகப்படுத்தும் விதமாக மதுரையில் ஒட்டப்படும் போஸ்டர்களும் அதகளத்தை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் தினத்தந்தி செய்தித்தாள் வடிவில் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் விஜய் தலைமையில் டி.டி.வி., தினகரன், அன்புமணி ராமதாஸ், ஓ.பி.எஸ்., அண்ணாமலை, ஜான்பாண்டியன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் எடிட் செய்தி புகைப்படமாக போட்டுள்ளனர். அதே போல் பிரதமர் மோடி தேர்தலில் விஜய் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தாகவும். பதவி ஏற்புவிழாவில் மோடி பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்து போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர். தங்களது கனவை வெளிப்படுத்தும் விதமாக ரசிகர்கள் ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


லோகேஷ் கனகராஜ் - விஜய் இரண்டாவது முறையாக கைக்கோர்த்துள்ள படம், லியோ. ஏற்கனவே மாஸ்டர் படத்தில் இணைந்து ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த இவர்கள், இந்த படம் மூலமாகவும் இன்னொரு ஹிட் கொடுக்க உள்ளனர். வெகு சில படங்களையே இயக்கி இருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் “நல்ல இயக்கநர்” என்ற பெயரை பெற்றுள்ளார் லோகேஷ் கனகராஜ். படம் குறித்த ஒவ்வொரு அறிவிப்புகளையும் அப்டேட்டுகளையும் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். லியோ படத்தில் திரிஷா, சஞ்சய் தத், மன்சூர் அலிகான், அர்ஜுன், மிஸ்கின் ஆகியோர் நடித்துள்ளனர்.


மேலும் லியோ படம் வெளிநாடுகளில் அமோக வியாபாரம் செய்ததால், அட்வான்ஸ் விற்பனை எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்படம் ஏற்கனவே UK பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய அதிக புக்கிங் ஆனா தமிழ் படமாக மாறி வருகிறது.  லியோ படம் இங்கிலாந்தில் சுமார் 30,000 டிக்கெட்டுகளை முன்கூட்டியே விற்பனை செய்துள்ளது. சுவாரஸ்யமாக, அங்கு அதிக டிக்கெட் விற்பனை ஆனா படங்களில் ஷாருக்கானின் பதான் உள்ளது, இந்நிலையில் விஜய்யின் லியோ படம் விரைவில் அதை வீழ்த்தி இங்கிலாந்து பாக்ஸ் ஆபிஸில் எல்லா காலத்திலும் மிகப்பெரிய இந்திய படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  கைதி மற்றும் விக்ரமுக்கு பிறகு பிரபலமான லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸில் (LCU) இந்த படம் இடம் பெறுமா என்று ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். 


மேலும் படிக்க | 50 வயது ராஜமெளலிக்கு இத்தனை கோடி சொத்துக்கள் இருக்கா.. தலையே சுத்துதே


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ