திருப்பதியில் லோகேஷ் கனகராஜ்! நண்பர்களுடன் சுவாமி தரிசனம்!

லோகேஷ் கனகராஜ் மற்றும் அவரது உதவியாளர்கள் லியோ படத்தின் வெளியீட்டிற்காக திருப்பதிக்கு சென்று சுவாமி தரிசனம் மேற்கொண்டுள்ளனர்.  

 

1 /5

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள தளபதி விஜய்யின் லியோ படம் அக்டோபர் 19, 2023 அன்று வெளியாக உள்ளது.  

2 /5

படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், படம் வெளியாவதற்கு முன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் எழுத்தாளர் ரத்ன குமார், லியோவின் மாபெரும் வெற்றிக்காக திருமலைக்கு பாத யாத்திரை மேற்கொண்டனர்.  

3 /5

லியோ படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று, படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளது.  

4 /5

லியோவில் சஞ்சய் தத், அர்ஜுன் சர்ஜா, பிரியா ஆனந்த், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் மற்றும் பலர் குறிப்பிடத்தக்க பாத்திரங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.   

5 /5

லோகேஷ் கனகராஜ் அடுத்து ரஜினியை வைத்து படம் இயக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது.