தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிடுகின்றனர். மயிலாடுதுறை நகராட்சியில் போட்டியிடும் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 2 பேர், சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் பேரணியாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தனர். அவர்களுக்கு நகராட்சி அலுவலகம் அருகே டிரம்ஸ் வாத்தியங்கள் முழங்க சிறப்பான வரவேற்பை விஜய் ரசிகர்கள் அளித்தனர். மயிலாடுதுறை மற்றும் சீர்காழி நகராட்சிகளில் இதுவரை 32 பேரும், குத்தாலம், மணல்மேடு உள்ளிட்ட 4 பேரூராட்சிகளில் 11 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | தேர்தலில் களமிறங்கும் திருநங்கைகள்: திராவிட கட்சிகளின் சமூக நீதிக்கு மற்றொரு சான்று


அப்பகுதிகளில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்கள் இன்னும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. சென்னை பூந்தமல்லி நகராட்சியிலும் 3 வார்டுகளில் விஜய் மக்கள் இயகத்தினர் போட்டியிடுகின்றனர். இன்று வேட்புமனு தாக்கல் செய்த அவர்கள், முன்னதாக விஜய் மக்கள் இயக்க கொடியுடன் ஊர்வலமாக சென்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர். 



அப்போது, அங்கு தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த பூந்தமல்லி இன்ஸ்பெக்டர் ஊர்வலமாக வரக்கூடாது, கொடியை எடுத்து வரக்கூடாது என எச்சரித்ததால், விஜய் ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு நிலவியது. தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அனைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என காவல்துறை எச்சரித்ததையடுத்து, விஜய் ரசிகர்கள் வாக்குவாதத்தை கைவிட்டனர். 



ALSO READ | Crime: திமுக வட்ட செயலாளர் செல்வம் படுகொலை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR