சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் தஹில்ரமணி!
மும்பை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான வி.கே. தஹில்ரமணியை சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது!
மும்பை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான வி.கே. தஹில்ரமணியை சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது!
சென்னை உயர்நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, விரைவில் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படவுள்ளார். இதனையடுத்து காலியாகும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு வி.கே. தஹில்ரமணி பெயரினை உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
இந்திரா பானர்ஜியை தவிர்த்து மேலும் இரண்டு உயர்நீதிமன்ற நீதிபதிகள் உச்சநீதிமன்றத்திற்கு தேர்வு செய்யப்படவுள்ளனர். கடந்தாண்டு உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.எஸ் கவுல் உச்சநீதிமனம்றதமதிறகு மாற்றப்பட்டப் போது, இந்திரா பானர்ஜி உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்.
இந்நிலையில் இந்திரா பானர்ஜி உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளதால், அவருடைய இடத்திற்கு மும்பை உயர்நீதிமன்றத்தின் மூத்த தலைமை நீதிபதி தஹில்ரமணி பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தஹில்ரமணி கடந்த 2001 ஆம் ஆண்டு ஜூன் 26-ஆம் தேதி மும்பை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்கும் மூன்றாவது பெண் நீதிபதி இவர் என்பது குறிப்பிடத்தக்கது!