Mano Thangaraj, Vijayadharani : விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்த விஜயதரணி, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி கடந்த 6 மாதங்களுக்கு முன் பாஜகவில் ஐக்கியமானார். இந்த நிலையில் அவருக்கு பாஜக கட்சியில் இது வரை எந்தவித பொறுப்புகளும் பதவிகளும் வழங்கபடாமல் இருந்து வருவதை நேற்று முன்தினம் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் வெளிப்படையாக தெரிவித்தார். இதுகுறித்து பேசிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜாகவில் இணைந்தது எவ்வளவு பெரிய தவறு என்று மிக குறிகிய காலத்தில் விஜயதாரணி உணர்ந்துள்ளார். குமரி மாவட்ட அரசியல் என்பது மதச்சார்பற்ற மற்றும் சமூக ரீதியான அரசியலுக்கு உறுதுணையாக இருக்க கூடியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1822 முதல் முறையாக இந்திய துணைக்கண்டத்தில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க போராட்டமான தோள் சீலை போராட்டம் உட்பட மொழிப்போர் போராட்டம் உள்ளிட்டவற்றை நடத்திய பெருமை இந்த மாவட்டத்துக்கு இருக்கிறது. இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்கும் தாவ கூடியவர்களுக்கு இடமே இல்லை என்பதை கடந்த காலங்கள் உருவாக்கி உள்ளன. ஆட்டிற்கு கொளையை கட்டினால் ஆடு பின்னால் செல்லும், அதே போன்று போனவர் தானே விஜயதாரணி நன்றாக அனுபவிக்கட்டும் என்று விமர்சித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், விஜய் கட்சி துவங்கியதை குறித்து விமர்சிக்க எதுவும் இல்லை.  நாட்டில் எத்தனை ஆயிரம் கட்சிகள் உள்ளன.


மேலும் படிக்க | 'அண்ணாமலை எத்தனை ஜென்மம் எடுத்தாலும்...' பாஜகவை பந்தாடிய ஜெயக்குமார் - திமுகவுக்கும் அட்டாக்!


திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக மாறிய பிறகு எத்தனையோ கட்சிகள் உருவாகி மறைந்து போய் உள்ளன. விஜய் அவரது கட்சியின் கொள்கை என்ன காரணத்தை மையப்படுத்தி அரசியல் செய்ய போகிறார் என்பது குறித்து எதுவும் பேசவில்லை அதனால் அதை பற்றி நாம் பேசுவது அர்த்தமில்லை. எம்ஜிஆர் காலில் விழுந்த பிறகுதான் கலைஞர் ஆட்சியை பிடித்தார் என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறிய கருத்துக்கு, எடப்பாடி பழனிச்சாமி தவழ்ந்துபோய் முதல்வர் ஆனது போன்றா என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பினார். திண்டுக்கல் சீனிவாசன் என்ன வரலாற்று ஆசிரியராக மாற முயற்சி எடுக்கிறாரோ?, எம்ஜிஆரும், கலைஞரும் சிறந்த நண்பர்கள்.  நட்போடு பழகியவர்கள் கலைஞரை தலைவராக ஏற்றுக் கொண்டு அவருக்காக பல்வேறு பொதுக்கூட்டங்களில் பேசியவர் தான் எம்ஜிஆர் என்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார். 


கலைஞர் எப்படிபட்ட ஆளுமை?, எப்படிபட்ட வைராக்கியமான அரசியல்வாதி?, எந்த ஒரு சூழலிலும் சமரசங்களுக்கு இடம் கொடுக்காத ஒரு ஆளுமையை பார்த்து திண்டுக்கல் சீனிவாசன் போன்ற நபர்கள் பேசுவது அசிங்கம். அதிமுகவுக்கு பாஜகாவுக்கும் இடையே உறவில் விரிசல் ஏற்பட்ட பிறகு பலமுறை அவர்கள் விமர்சித்து பேசி இருக்கிறார்கள். அதில் ஒன்றும் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. பாஜக அதிமுகாவை கபளீகரம் செய்ய முயன்றார்கள், அதற்குள் அவர்கள் விழித்துகொண்டதால் தப்பி ஓடி நிற்கிறார்கள் எனவும் அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சனம் செய்தார். மேலும், திமுக -வை யாரும் குறைத்து மதிப்பிடாதீர்கள், திமுக ஆலமரம் போன்றது, யாருக்கும் அஞ்சாத பனங்காட்டு நரி என்றும் அவர் கூறிச் சென்றார். 


மேலும் படிக்க | கிசுகிசு : காட்பாடியார் கடுப்புக்கு காரணம் இதுதானாம் - துமு வேண்டும் என கறார்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ