Chennai: தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் (Vijayakanth) அவர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இன்று  தேமுதிக சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் சிகிச்சை பெற்று வந்த தலைவர் விஜயகாந்த் பூரண உடல் நலத்துடன் உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த அறிக்கையில், தலைவர் விஜயகாந்த்  அவர்கள் வழக்கமாக ஆறு மாதத்திற்கு ஒருமுறை உடல் பரிசோதனை செய்துக்கொள்ள சென்னை மியாட் மருத்துவமனைக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் நேற்று மருத்துவமனைக்கு சென்ற போது, அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவருக்கு லேசாக கொரோனா (Coronavirus) அறிகுறி இருப்பது தெரியவந்தது. அதை உடனடியாக சரி செய்யப்பட்டு விட்டது. தற்போது தலைவர் விஜயகாந்த் பூரண உடல் நலத்துடன் உள்ளார் என அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


முன்னதாக நேற்று, ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல் இருந்த விஜய்காந்த் (Vijayakanth), கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளார் என்ற செய்தி டிஎம்டிகே (DMDK) கட்சி தொண்டர்களுக்கும் அவரது ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதனையடுத்து சமூக ஊடகங்களில் #PrayForVijayakanth என்ற ஹேஸ்டேக்கை விஜயகாந்த் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் ட்ரெண்டிங் செய்யத் தொடங்கினர்.


ALSO READ  | DMDK தலைவர் விஜயகாந்திற்கு COVID-19; சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி


கடந்த சில மாதங்களாகவே தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நல குறைவு ஏற்பட்டதால், அமெரிக்காவில் சிகிச்சை பெற்று குணமடைந்தார். தற்போது பெரிய அளவில் கட்சி பணிகளில் கவனம் செலுத்தாமல், வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். தற்போது அவருக்கு வயது 68 ஆகிறது.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR