Vijayakanth Health: தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல் இருந்த விஜய்காந்துக்கு (Vijayakanth), தற்போது அவருக்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளார் என்ற உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் டிஎம்டிகே (DMDK) கட்சி தொண்டர்களுக்கும் அவரது ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இருப்பினும், விஜய்காந்திற்கு கொரோனா வைரஸ் (COVID 19 Positive) உறுதி செய்யப்பட்டது தொடர்பான எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் மருத்துவமனை நிர்வாகம் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


தற்போது அவர் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் சீராக இருப்பதாக (Vijayakanth Health Updates) மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் கொரோனா குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.


ALSO READ | கொரோனாவுக்கு எதிராக முககவசம் அணிவோம்; விஜயகாந்த் வேண்டுகோள்


விஜயகாந்தின் ரசிகர்கள் (Vijaykanth Fans) ஏற்கனவே ட்விட்டர் மற்றும் சமூக ஊடகங்களில் #PrayForVijayakanth என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்டிங் செய்யத் தொடங்கியுள்ளனர்.


கடந்த சில மாதங்களாகவே தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நல குறைவு ஏற்பட்டதால், அமெரிக்காவில் சிகிச்சை பெற்று குணமடைந்தார்.  தற்போது பெரிய அளவில் கட்சி பணிகளில் கவனம் செலுத்தாமல், வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். தற்போது அவருக்கு வயது 68 ஆகிறது.


ALSO READ |  கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய இடம் அளித்த விஜயகாந்த்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR