கொரோனாவில் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள முககவசம் அணிவோம் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., "கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தமிழகத்தில் கொரோனா வைரஸ்க்கு எதிராக ஊரடங்கு அமலுக்கு வந்து ஒரு மாதம் முடிந்து மே 3ம் தேதி வரைக்கும் நீட்டிக்கப்பட்டுள்ள.
இந்த காலகட்டத்தில் மக்களிடையே மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒட்டுமொத்த தமிழக மக்களும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை சேர்ந்த கழக நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை அனைவருமே, அவரவர்கள் முகத்தில் முககவசம் (Mask) அணிந்து மொபைல் போனில் செல்ஃபி (Selfi) படம் எடுத்து டிபியாக (Dp) பதிவிட்டும், அதை சமூக வலைதளங்களில் (Whatsapp DP, Status, Facebook, Instagram, Twitter) போன்றவற்றில் பதிவிட்டு முககவசத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வண்ணம் விழிப்புணர்வு பிரச்சாரத்தை நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஏற்படுத்த வேண்டும் என தமிழக மக்களையும், தேமுதிக தொண்டர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் இந்த விழிப்புணர்வு புகைப்படத்தை மே 3ம் தேதி வரை அவரவர்கள் மொபைலில் டிபியா (Dp) வைத்து தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும். ஒன்றிணைவோம்! வென்றிடுவோம்!!" என குறிப்பிட்டுள்ளார்.
COVID-19 பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 24 அன்று 21 நாள் நாடு தழுவிய முழு அடைப்பை அறிவித்தார். பின்னர் பூட்டுதல் மே 3 வரை நீட்டிக்கப்பட்டது. இருப்பினும் இந்த முழு அடைப்பு பலன் அளித்தது போல் தெரியவில்லை, தொடர்ந்து கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை நாட்டில் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் மொத்தம் 23,452 உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் இதுவரை பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் 4,814 பேர் குணமடைந்துள்ளனர் என்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. அரசு தகவல்கள் படி நாட்டில் தற்போது 17,915 கொரோனா வழக்குகள் செயல்பாட்டில் உள்ளன, அதே நேரத்தில் 723 பேர் கொரோனா வைரஸ் காரணமாக உயிர் இழந்துள்ளனர்.
கொரோனாவில் இருந்து தப்பிக்க ஒரே வழி சமூக விலகல் என அரசு அறிவுறுத்தி வருகிறது, எனினும் மக்கள் அரசின் வார்த்தைகளை பின்பற்றுவதாய் தெரியவில்லை. மக்கள் அவர்களை பாதுகாத்துக்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முககவசம் அணிய வேண்டும் என கேட்டுக்கொள்கிறது, ஆனால் மக்கள் இதுவரை இதனை முறையாக பின்பற்றவில்லை, இந்நிலையில் முககவசம் அணிவதன் முக்கியத்துவத்தை தற்போது தேமுதிக தலைவர் விஜயகாந்த் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முன்முயற்ச்சி எடுத்துள்ளார்.