கோவை மாவட்டம், சூலூர் அடுத்த கரவளி மாதப்பூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதியில் தனியார் அலுமினிய உருக்காலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் அதிகளவில் விவசாய நிலங்கள் உள்ளன. அதுமட்டுமில்லாமல், குடியிருப்பு பகுதிகளும் அதிகம் இருப்பதால் இந்தப் பகுதியில் உருக்கு ஆலை அமைப்பதற்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. ஆலைக்கு எதிராக விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். உருக்காலைக்கு எதிராக ஊராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற இருப்பதாக முடிவு செய்யப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | உயர் மின்னழுத்த கோபுரம் மீது ஏறி விவசாயிகள் போராட்டம்..!


அதிமுகவைச் சேர்ந்த வார்டு கவுன்சிலர் பால நாகம்மாள் மற்றும் அவரது கணவர் உருக்காலை செயல்படுவதற்கு ஆதரவாக 5 லட்சம் ரூபாய் வரை பேரம் பேசும் ஆடியோ சமீபத்தில் வெளியாகி கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இனி ஊராட்சி மன்ற நிர்வாகத்தை நம்பி பயனில்லை என முடிவு செய்த கிராம மக்கள், உருக்காலையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து, சூலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தைத் தொடங்கினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் விவசாயிகளுடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், எந்த உடன்பாடும் எட்டப்படாததால் கிராம மக்களின் உள்ளிருப்புப் போராட்டம் இரண்டாவது நாளாக தொடர்கிறது. மக்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள கழிவறை மற்றும் பிரதான வாயிற்கதவுகளை போலீஸார் பூட்டினர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், இயற்கை உபாதைகளைக் கழிக்க இயலாமல் தவித்து வருகின்றனர். அலுவலக வாயில்களை திறந்துவிடுமாறு விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டும் எந்தப் பயனும் இல்லை. ஆனாலும், போராட்டத்தைக் கைவிடாமல் கிராம மக்கள் இரண்டாவது நாளாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது, நடைபெற்று வரும் போராட்டத்திற்கு குழந்தைகளுடன் பொதுமக்கள் வந்து, சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் சூலூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் பரபரப்புடன் காணப்படுகிறது. 


மேலும் படிக்க | ரிஷிவந்தியம் தனி தாலுக்காப் பிரச்சனை - ஓர் அலசல்.!


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR