கள்ளச்சாராய விவகாரம்: சமூக போராளிகள், பிரபலங்கள் எல்லாம் எங்கப்பா போனீங்க? எடப்பாடி பழனிசாமி
விழுப்புரம் கள்ளச்சாராய சம்பவத்துக்கு சம்பவத்திற்கு முழு பொறுப்பேற்று முதலமைச்சர் ஸ்டாலின், பதவி விலக வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி பயணம்
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் எக்கியார் குப்பம் கிராமத்தில் கள்ளச்சாராயம் அருந்தி இன்று வரை 14 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 42 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் அவசர சிகிச்சை பிரிவில் 10 நபர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சிகிச்சை பெற்று வரும் 42 நபர்களையும் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, நேரில் அவர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.
ஸ்டாலின் ஆட்சியில் நடவடிக்கை இல்லை
இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், 2 ஆண்டு காலத்தில் எந்த திட்டத்தையும் திமுக கொண்டு வரவில்லை. ஸ்டாலின் ஆட்சியில் கள்ளச்சாராயம் காட்சி நபர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விழுப்புரம் மாவட்டத்தில் அரசியல் பின்பலம் உள்ளவர்கள் தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதையெல்லாம் கட்டுப்படுத்த தவறிய காரணத்தால் 18 உயிர்களை இழந்து உள்ளோம். செங்கல்பட்டு மாவட்டம் சித்தாம்பூர் பகுதியில் ஐந்து பேர் இறந்துள்ளனர். பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாகப்பன் அம்மாவாசை என்ற திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் விற்பனை குறித்து கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டிருந்தது.
மேலும் படிக்க | திமுக - பிடிஆர் விவகாரம்! எடப்பாடி பழனிச்சாமி எடுத்த முக்கிய முடிவு!
திமுக அரசு பதவி விலக வேண்டும்
இப்போது, இரண்டே நாட்களில் 2000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கள்ளச்சாராய விற்பனை போலி மதுபான விற்பனை நடப்பது காவல்துறைக்கு ஏற்கனவே தெரிந்திருக்கிறது. இந்த சம்பவத்திற்கு முழு பொறுப்பேற்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும். எளிய உழைப்பாளிகள் விலைமதிக்கு முடியாத உயிர்களை இழந்து உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராயம் வியாபாரம் தடை இல்லாமல் நடைபெற்று வருகிறது. அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால் உயிர் பலியை தடுத்திருக்கலாம்.
சமூக போராளிகள் எங்கே?
ஆளுங்கட்சியினர் போதை பொருளை விற்பனையில் ஈடுபடுவதால் இதனை கட்டுப்படுத்த முடியவில்லை. குடிப்பவர்களை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் மது குடிப்பவர்களை இந்த அரசாங்கம் ஊக்குவித்து வருகிறது. ஒரு மது பாட்டிலுக்கு 10% கமிஷன் பெறுகின்றனர். விற்பனையில் ஊழல் செய்துள்ளனர். இது குறித்து எந்த சமூக போராளிகளும், திரைப்பட பிரபலங்களும் குரல் கொடுக்கவில்லை. 30 ஆயிரம் கோடி கொள்ளையடித்துள்ளதாக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். இது குறித்தும் விசாரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | பாஜக இனிமேல் இதை செய்யவே முடியாது - திருமாவளவன்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ