மெட்ராஸ் உயர்நீதிமன்ற புதிய நீதிபதியாக வினீத் கோத்தாரி பதவியேற்றுக் கொண்டார்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைப்பெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி தஹிலரமானி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 


வினீத் கோத்தாரி பதவியேற்றதால் உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை தற்போது 61-ஆக உயர்ந்துள்ளது.


கர்நாடகா உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றி வந்த வினீத் கோத்தாரி, மத்திய சட்ட அமைச்சக அறிவிப்பின் படி சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். முன்னாதக கடந்த நவம்பர் 10-ஆம் நாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மூவரை வெவ்வேறு மாநிலங்களுக்கு மாற்ற வேண்டும் என மத்திய சட்ட அமைச்சகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டது.


இந்த அறிக்கையின்படி கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி வினீத் கோத்தாரி மெட்ராஸ் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். அதே வேலையில் காஷ்மீர் உயர்ந்தீமன்ற நீதிபதி அலோக் அராதே, கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். பஞாசாப் மற்றும் அரியாணா மாநில உயர் நீதிமன்ற நீதிபதி ராஜேஷ் பிந்தால், காஷ்மீர் மாநில உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார்.


இந்நிலையில் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்ட வினீத் கோத்தாரி இன்று மெட்ராஸ் உயர்நீதிமன்ற வளாகத்தில் பதவியேற்றுக்கொண்டுள்ளார்.