அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தேனி  மாவட்ட பொதுச்செயலாளராக இருந்தவர் மறைந்த எஸ்.ஆர்.தமிழன். கடந்த 2014 ஆம் ஆண்டில் இவரின் இறுதி ஊர்வலத்தின் போது அல்லிநகரம் பகுதியில் இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டு கலவரம் ஏற்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அன்றிலிருந்து எஸ்.ஆர்.தமிழன் நினைவு தினத்தன்று  பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுவது வழக்கம். ஆண்டு தோறும் அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அரசியல் கட்சி உட்பட பல்வேறு அமைப்பினர்  அஞ்சலி செய்வது வழக்கமாக நடைபெறும் நிகழ்வாகும். 


இந்நிலையில் எஸ்.ஆர்.தமிழன் ஏழாம் ஆண்டு நினைவு தினமான இன்று காலை முதலே உடல் அடக்கம் செய்யப்பட்ட தேனி ரத்தினம் நகரில் உள்ள சமாதியில் பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள் மரியாதை செலுத்தி வந்தனர். அந்த வகையில் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நிறுவன தலைவர் திருமாறன் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது ஆதரவாளர்களுடன் 20 க்கும் மேற்பட்ட வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். 


ALSO READ | பாரம்பரிய விழாவை நடனத்துடன் கொண்டாடிய தோடர் இன மக்கள்..! வீடியோ


இவர்களது வாகனம் தேனி புதிய பேருந்து நிலையம் செல்லும் புறவழிச்சாலை சந்திப்பில் வந்து கொண்டிருந்த போது தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியை சேர்ந்தவர்கள் கல்வீசி தாக்கியதாக கூறப்படுகிறது.


 பின்னர் இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு மோதல் ஏற்பட்டது. இதில் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நிறுவன தலைவர் திருமாறன் ஜீ வாகனம் உட்பட மூன்றுக்கும் மேற்பட்ட வாகனங்களின் கண்ணாடி உடைக்கப்பட்டது. இந்த மோதலில் இருவர் காயங்களுடன் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்‌. 


இரு அமைப்பைச் சேர்ந்தவர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.


  இந்த மோதல் சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கப்பட்ட வாகனங்கள் மற்றும் காயமடைந்தவர்களுடன், தென் இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். 


பின்னர் காயமடைந்த பாலமுருகன், ஹரிகிருஷ்ணன், தமிழ்செல்வன், பாண்டியராஜன் ஆகிய 4பேர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


தென் இந்திய பார்வர்ட்  பிளாக் கட்சியில் இருந்து பனியாற்றியவர்கள் சிலர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து  கடந்த ஆண்டு தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் என்ற அமைப்பை உருவாக்கிய நிலையில் இன்று இரு தரப்பினரும் பயங்கரமாக மோதிய சம்பவம் கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


ALSO READ | ’குசும்பு மட்டுமில்லை, ஏமாத்தவும் செய்றீங்க’ கோவையில் உதயநிதி கலகல பேச்சு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR