’குசும்பு மட்டுமில்லை, ஏமாத்தவும் செய்றீங்க’ கோவையில் உதயநிதி கலகல பேச்சு

அமைச்சராகும் எண்ணம் தனக்கில்லை எனத் தெரிவித்துள்ள உதயநிதி ஸ்டாலின், கோவை மக்கள் ஒருதொகுதியில் கூட திமுகவை வெல்ல வைக்காமல் ஏமாற்றிவிட்டதாகவும் கூறியுள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 26, 2021, 03:32 PM IST
’குசும்பு மட்டுமில்லை, ஏமாத்தவும் செய்றீங்க’ கோவையில் உதயநிதி கலகல பேச்சு title=

கோவை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்துள்ள சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், காளப்பட்டியில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்த அவர் முன்னிலையில் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் என சுமார் ஆயிரம் பேர் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். பின்னர் இந்த விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், கோவையில் கடந்த தேர்தலின்போது 2 நாட்கள் தங்கியிருந்து பணியாற்றியதாக தெரிவித்தார். 10 தொகுதியில் 5 தொகுகளிலாவது வெற்றிபெறுவோம் என எண்ணியிருந்ததாக கூறிய அவர், கோவை மக்கள் சில நேரம் ஏமாற்றவும் செய்கிறீர்கள் என கலகலப்பாக பேசினார்.

ALSO READ | ஆதிபராசக்தியாக மாறிய கள்ளக் காதலி

திமுக பொறுப்பேற்றதில் இருந்து கொரோனா வைரஸைக் கட்டுபடுத்த வேண்டிய மிகப்பெரிய பொறுப்புடன் களத்தில் பணியாற்றி வருவதாக கூறிய அவர், தேர்தலின்போது திமுக கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும் எனக் கூறினார். தற்போது ஒமிக்ரான் வைரஸ் பரவி வருவதால், அரசு அதற்கான முன்னேற்பாடுகளில் கவனம் செலுத்தி வருவதாகவும், திமுகவின் சாதனைகளை கட்சியினர் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் எனத் தெரிவித்தார்.

நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிப்பெற அனைவரும் பாடுபட வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். அமைச்சர் அல்லது துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என கட்சியினர் கூறி வந்தாலும், அதை தான் விரும்பவில்லை எனக் கூறினார். கட்சி தலைமைக்கு துணையாக இருப்பது மட்டுமே தன்னுடைய ஒரே குறிக்கோள் என்றும் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

ALSO READ | காற்றில் பறந்து கொரோனா விதிமுறைகள்; ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News