சென்னை: எந்த ஒரு பிரச்னைக்கும் வன்முறை மற்றும் கலவரம் தீர்வாகாது என நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்து உள்ளார். புதிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிராக நாடு முழுவதும் பல போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வடகிழக்கு மாநிலங்கள் டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம், தமிழ்நாடு, கர்நாடகா போன்ற மாநிலங்களில் மாணவர்கள், பொதுமக்கள் உட்பட அரசியல் கட்சிகளும் போரட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. பல இடங்களில் போராட்டம் வன்முறையாக மாறி வருகிறது. மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் நடைபெற்று வரும் வன்முறை சம்பவத்தை அடுத்து, சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு கான வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகி விடாக்கூடாது. தேசப்பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் எல்லோரும் ஒற்றுமையுடன் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தற்போது நாட்டில் நடந்துக் கொண்டிருக்கும் வன்முறைகள் என மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது. இவ்வாறு பதிவிட்டுள்ளார்.


 



ரஜினியின் பதிவை அடுத்து சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் தனது பதிவில் எந்த இடத்திலும் "குடியுரிமை திருத்த சட்டம்" என்று குறிப்பிடவில்லை. அவரின் கருத்து குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடக்கும் வன்முறை பற்றியதா? அல்லது பொதுவாகவே நாட்டில் நடக்கும் வன்முறை மற்றும் கலவரம் குறித்தா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


கடந்த 16 ஆம் தேதி "தர்பார்" ட்ரெய்லர் மும்பையில் நடந்த விழாவில் வெளியிடப்பட்டது. அப்பொழுது செய்தியாளர்கள் மத்தியில் பேசிய நடிகர் ரஜினிகாந்திடம் "குடியுரிமை சட்டம் குறித்து" கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் அவர்கருத்து கூற மறுத்துவிட்டார். தற்போது ட்விட்டரில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடக்கும் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.